முத்து கண்ணில் சிக்கப் போகும் ரோகிணியின் மாமா.. விஜயாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய மீனா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனாவை காணவில்லை என்றதும் முத்து பதட்டத்துடன் அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்தார். பிறகு வீட்டிற்கு திரும்பிய முத்து, மீனாவை பார்த்ததும் சந்தோஷத்தில் செல்லமாக மீனா மீது கோபப்பட்டு பின் அரவணைத்துக் கொண்டார். அந்த நேரத்தில் இவர்கள் இருவரின் அன்பை பார்க்கும் போது ரொம்பவே பூரிப்பாக இருந்தது.

முக்கியமாக முத்து, மீனா மீது வைத்திருக்கும் அளவு கடந்த காதலை எதார்த்தமாக காட்டினார். பிறகு அனைவரும் சேர்ந்து மீனாவிடம் எங்கே போனாய் என்று கேட்கிறார். அதற்கு நான் பூ கட்டும் விஷயமாக போயிருந்தேன். போகும் பொழுது வீட்டில் யாரும் இல்லாததால் சுருதியிடம் மட்டும் சொல்லிவிட்டு போனேன் என்று சொல்கிறார்.

விஜயாவுக்கு சவுக்கடி கொடுக்கும் சுருதி

ஆனால் ஸ்ருதி எதுவுமே சொல்லவில்லை என்று எல்லோரும் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது சுருதி வருகிறார். அப்பொழுது அவரிடம் கேட்டதற்கு எனக்கே தெரியாதே என்று சொல்லிய நிலையில் எப்பொழுது சொன்னீங்க என்று மீனாவிடம் கேட்கிறார். அப்பொழுது மீனா நீங்கள் குளிக்க போகும் பொழுது உங்களிடம் சொல்லிட்டு நான் கிளம்பிவிட்டேன் என்று சொல்கிறார்.

உடனே ஸ்ருதி அந்த நேரத்தில் நான் காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு பேசிக் கொண்டிருந்தேன். அதனால் நீங்கள் சொல்லுவதை நான் கவனிக்கவில்லை என்று சொல்கிறார். பிறகு இந்த பஞ்சாயத்து ஒரு வழியாக முடிந்த நிலையில் மீனா, விஜயாவை பார்த்து நீங்கள் என்ன சொன்னீங்க. என் புருஷனுக்கு என் மேல பாசமே இல்ல வேண்டா வெறுப்பாக இருக்கிறார் என்று சொன்னீங்க.

இப்ப புரியுதா எங்களுடைய கணவன் மனைவி தாம்பத்திய வாழ்க்கை எந்த அளவுக்கு உண்மையாக உணர்வுபூர்வமாக இருக்கிறது என்று விஜயாவிடம் கேட்டு லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார். இதனை தொடர்ந்து சுருதி, மீனாவிடம் நீங்க ஏன் இவ்ளோ பொறுமையாக இருக்கிறீர்கள். உங்களுக்கு கோபமே வராதா என்று கேட்கிறார்.

அதற்கு மீனா இப்பொழுது அத்தை உங்களை திட்டினால் என்ன பண்ணுவீங்க என்று கேட்கிறார். உடனே சுருதி கையில் இருக்கும் கரண்டியை சூடு பண்ணி அப்படியே அவர்களுக்கு எக்ஸ் மாதிரி போட்டு விடுவேன் என்று காரசாரமாக பேசிக் கொண்டிருக்கிறார். இதை வெளியில் இருந்து கேட்ட விஜயா அப்படியே வாயடைத்து போயி பயந்து நிற்கிறார்.

ஆடுற மாட்ட ஆடி தான் கறக்கணும் என்று ஒரு பழமொழிக்கேற்ப இப்படிப்பட்ட மாமியாருக்கு சரியான மருமகளாக ஸ்ருதி தான் பாடம் கற்பித்து கொடுக்கணும். இதனை அடுத்து ரோகிணி செய்த தவறுகள் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் ஜெயித்துக் கொண்டே வருகிறார். அந்த வகையில் ரோகினிக்கு ஆப்பு வைக்கும் விதமாக முத்துக்கு ஒரு ஆதாரம் கிடைக்கப் போகிறது.

அதாவது காரில் சவாரி ஏற்றுக்கொண்டு போகும் போது எதேர்ச்சியாக முத்து கண்ணில் ரோகினி மாமா பிரவுன் மணி சிக்கப் போகிறார். ஆனால் முத்து பார்த்து விட்டார் என்று தெரிந்ததும் ரோகிணி மாமா ஓடி ஒளிய போகிறார். பிறகு முத்து இதுதான் என்னுடைய முதல் வேலை என்று ரோகினியின் மாமாவை தேடிப் பிடித்து ரோகிணி பற்றி மறைந்து கிடக்கும் பல உண்மைகளை வெளிக்கொண்டு வரப்போகிறார். இந்த ஒரு தருணம் கூடிய விரைவில் நடந்தால் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்திற்கு வந்துவிடும்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -