மீனாவின் தம்பி ஆதாரத்தை முத்துவிடம் இருந்து கைப்பற்றிய ரோகினி.. சத்யா மூலம் கல்யாணிக்கு வரப்போகும் பிரச்சனை

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்துவிடம் இருக்கும் ஆதாரத்தை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என்று ரோகிணி பிளான் பண்ணிவிட்டார். அதன்படி வீட்டில் முத்து அசர்கிற நேரத்தில் போனை ஆட்டைய போட வேண்டும் என்று ரோகிணி அங்கே குட்டி போட்ட பூனை மாதிரி சுற்றிக் கொண்டு வருகிறார்.

அப்பொழுது முத்துவின் போன் சார்ஜ் இல்லை என்பதால் சார்ஜ் போட்டுவிட்டு வேலையை பார்க்கப் போகிறார். அந்த நேரத்தில் ரோகினி, முத்துவின் ஃபோனை எடுத்து பார்க்கிறார். ஆனால் அப்பொழுது முத்து மற்றும் மீனா ரூம்குள் வந்து விட்டதால் ரோகிணி அந்த ஃபோனை எடுத்து கட்டில் கீழே போய் ஒளிந்து கொண்டு வீடியோவை செக் பண்ணி பார்க்கிறார்.

ரோகினி கையில் கிடைத்த ஆதாரம்

அதன்படி லோக்கல் ரவுடி சொன்னது போலவே மாமியாரிடம் இருந்து பணத்தை அபகரித்தது இந்த சத்யா தான் என்கிற வீடியோவை ரோகிணி பார்த்து விடுகிறார். பார்த்ததும் எந்த ஒரு வீடியோ போதும் நமக்கு சாதகமாக பல விஷயங்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று ரோகிணி சந்தோசப்பட்டுக் கொள்கிறார். எப்படியாவது இந்த வீடியோவை நம் போனுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று முயற்சி எடுக்கிறார்.

ஆனால் அந்த நேரத்தில் முத்துவின் போன் சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆப் ஆகிறது. உடனே ரோகிணி இந்த நேரத்தில் சுவிட்ச் ஆப் ஆகி விட்டதே என்று டென்ஷன் ஆகிறார். அப்பொழுது முத்து சவாரிக்கு நேரம் ஆகிவிட்டது என் போனை சார்ஜ் போட்டு இருக்கிறேன் எடுத்துக் கொடு என்று மீனாவிடம் சொல்கிறார். ஆனால் மீனா அதை பார்க்கும் பொழுது அங்கே முத்துவின் போன் சார்ஜில் இல்லாததை நோட் பண்ணுகிறார்.

பிறகு முத்துவிடம் சொல்லும் பொழுது இங்கதான் சார்ஜ் போட்டேன் என்று குழம்பிக் கொண்டு வீட்டிற்குள் தேடிப் பார்க்கிறார்கள். ஆனால் அதற்குள் ரோகினி அந்த போனை பெட்ரூம்குள் எங்கேயாவது வைத்து விட்டு எஸ்கேப் ஆகி விடுவார். ஆக மொத்தத்தில் ரோகினி, சத்யாவை பற்றிய விஷயங்களை வீடியோ மூலம் தெரிந்து கொண்டார்.

இனி இதை வைத்தே முத்து மற்றும் மீனாவிற்கு பிரச்சனையே உண்டாக்க வேண்டும் என்பதற்காக லோக்கல் ரவுடி சிட்டியிடம் ஐடியா கொடுக்கப் போகிறார். அதன்படி இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் அனுப்பி மீனாவின் தம்பி ஒரு திருடன் என்கிற முத்திரையை குத்தி விடுவார்கள். இதை பார்த்த மீனாவின் குடும்பம் அவமானத்தில் தலை குனிந்து சத்யாவை திட்ட போகிறார்கள்.

இதற்கு காரணம் முத்து தான் என்று கோபத்தில் சத்யா, முத்துவிடம் வந்து சண்டை போட போகிறார். அதே மாதிரி விஜயாவும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு மீனாவை அவமானப்படுத்தப் போகிறார். உன் தம்பி ஒரு திருடன் என்பது எனக்கு எப்பவும் தெரியும். ஆனால் என்ன தைரியம் என்றால் என்னிடமே அவன் பணத்தை திருடி இருக்கிறான் என்ற கோபத்தை காட்டப் போகிறார்.

இதனால் மீனா வழக்கம்போல் அழுது கொண்டே இருக்கப் போகிறார். அதே மாதிரி முத்து எப்படி நம் போனில் இருக்கும் வீடியோ வெளியே லீக் ஆனது என்று கொஞ்சம் யோசித்துப் பார்க்கும் பொழுது ஏதோ ஒரு தப்பு நடந்து இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு சத்யாவிடம் சொல்லி புரிய வைக்க முயற்சி எடுக்கும் வாய்ப்பு உண்டு. அப்படி சத்யா, முத்துவை புரிந்து கொண்டால் இதற்குப் பின்னணியில் லோக்கல் ரவுடி சிட்டி தான் இருக்கிறார் என்பதும் தெரிய வந்து விடும்.

ஆனால் எப்படி இந்த வீடியோ அவன் கைக்கு போனது என்பதை கண்டுபிடிக்கும் விதமாக முத்து, சமூக வலைதளங்களில் இது யார் போனிலிருந்து முதலில் போய் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளப் போகிறார். அப்பொழுதுதான் ரோகினி பற்றிய விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளியே வரும். பிறகு சத்யாவே, ரோகிணியின் பிளாக் மெயில் நபர் பற்றிய விஷயங்களை முத்துவிடம் சொல்லி அதற்கு காரணம் என்ன ஏன் அவன் பிளாக் மெயில் பண்ணுகிறான் என்ற விஷயமும் வெளிவர போகிறது.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News