முத்துவின் போனை ஆட்டைய போடும் ரோகிணி.. சிட்டி கொடுக்கும் டார்ச்சர், மாட்டப்போகும் கல்யாணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணிக்கு மீனாவின் தம்பி ஒரு திருடன் அதுவும் மாமியாரிடமிருந்தே பணத்தை திருடி இருக்கிறார் என்பது லோக்கல் ரவுடி சிட்டி மூலம் தெரிந்துவிட்டது. இந்த ஒரு விஷயத்தை வைத்து மீனாவுக்கு குடைச்சல் கொடுக்கலாம் என்று பிளான் பண்ணி விட்டார். அத்துடன் சிட்டி, முத்துவிடம் இருக்கும் வீடியோ ஆதாரத்தை என்னிடம் கொடுக்க வேண்டும் என்று ரோகினிடம் கேட்டிருக்கிறார்.

அதனால் வீட்டிற்கு வந்த ரோகிணி, மீனாவின் தலையில் அடிபட்டு இருப்பதை பார்த்து உங்களுக்கு கொஞ்சம் நேரம் சரியில்லை. உங்கள் குடும்பத்திற்கு ஏதோ ஒரு பிரச்சனை வரப்போவதாக ஜோசியர் சொல்லியிருக்கிறார் என்று மீனாவை குழப்பி விட்டார். இதனால் பயத்தில் இருக்கும் மீனா, யாருக்காவது ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்று கவலைப்படுகிறார்.

தன் தலையில் தானே மண்ணை வாரி போடும் ரோகினி

ஆனால் முத்து, அப்படி எதுவும் தவறாக நடக்காது. நல்லதையே யோசி நல்லதே நடக்கும் என்று ஆறுதல் சொல்லி மீனாவுடன் சேர்ந்து பூவை கொடுப்பதற்கு பைக் டிரைவர் வேலையை பார்த்து வருகிறார். அந்த நேரத்தில் சிட்டி, எதேர்ச்சியாக சத்யாவை சந்திக்கிறார். ஆனால் சத்தியா அக்காவை அடித்த கோபத்தை காட்டும் விதமாக சிட்டியை அலட்சியப்படுத்தி பேசாமல் போய்விடுகிறார்.

இதனால் உச்சகட்ட கோபத்தில் இருக்கும் சிட்டி கண்ணில் முத்து மீனா தென்படுகிறார்கள். உடனே அவர்களை பாலோ பண்ணி பைக்கை இடித்து காயப்படுத்த வேண்டும் என்று முத்து மீனாவை பாலோ பண்ணி போகிறார். ஆனால் முத்து கொஞ்சம் விபத்தில் இருந்து தப்பித்து விடுகிறார். உடனே சிட்டி, ரோகினிக்கு போன் பண்ணி நான் கேட்ட ஆதாரம் என்ன ஆச்சு.

எப்பொழுது எடுத்து தருவீர்கள் என்று ரோகினிக்கு தொந்தரவு கொடுத்து கேட்க ஆரம்பிக்கிறார். ரோகினி, அவ்ளோ சீக்கிரமாக முத்து ஃபோனில் இருந்து ஆதாரத்தை எடுக்க முடியாது. கொஞ்சம் எனக்கு டைம் கொடுங்கள் என்று கேட்கிறார். அதற்கு சிட்டி, கொஞ்சம் கூட நேரமில்லை. நீங்கள் எனக்கு இந்த காரியத்தை செய்து கொடுத்தால் தான் உங்களை பிளாக்மெயில் பண்ணும் நபரை நான் கண்டிக்க முடியும் என்று டிமாண்ட் பண்ணி டீல் பேசுகிறார்.

இதனை அடுத்து முத்து மற்றும் மீனா அவர்களுடைய வரவு செலவுகளை நோட் பண்ணி லாபத்தை வைத்து மாடியில் ரூம் கட்டுவதற்கு சேமிப்பதை பேசுகிறார்கள். அப்பொழுது முத்து, மனசு விட்டு மீனாவிடம் பல விஷயங்களை பேசி இருவரும் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதைப் பற்றி பேசிக் கொள்கிறார்கள். அடுத்ததாக மறுநாள் முத்து தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது ரோகினி ஒளிந்து இருந்து நோட்டமிடுகிறார்.

அந்த வகையில் முத்து தூங்கி எழுந்ததும் போனே கட்டிலில் வைத்துவிட்டு அடுப்பாங்கரைக்கு போய் விடுகிறார். அந்த நேரத்தில் போனை எடுத்து விடலாம் என்று ரோகிணி முயற்சி எடுக்கிறார். ஆனால் அதற்குள் முத்து வந்துவிடுவதால் ரோகிணி அங்கு இருந்து குட்டி போட்ட பூனை மாதிரி சுற்றுகிறார். உடனே அடுத்து எப்படியாவது போனை எடுத்து விட வேண்டும் என்று கண்கொத்தி பாம்பாக முத்துவை நோட்டமிட்டே வருகிறார்.

அதனால் எப்படியாவது முத்துவின் போனை ஆட்டையை போட்டு அதில் இருக்கும் ஆதாரத்தை சிட்டிக்கு அனுப்பும் விதமாக ரோகிணி அவருடைய தில்லாலங்கடி வேலையை ஆரம்பித்து காரியத்தை கச்சிதமாக முடித்து விடுவார். இதனால் முத்து மற்றும் மீனாவிற்கு மட்டும் இல்லாமல் சத்யாவிற்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் இதற்கு என்ன காரணம் யார் என்னுடைய ஃபோனில் இருந்து இந்த வீடியோவை சிட்டிக்கு அனுப்பி வைத்தார் என்ற உண்மையை முத்து கண்டுபிடிக்கும் விதமாக அடுத்த விறுவிறுப்பான காட்சிகள் நடக்கப் போகிறது. அப்பொழுது நமக்கு வீட்டில் இருக்கும் விரோதி மற்றும் மூளையை இந்த அளவுக்கு பயங்கரமாக யூஸ் பண்ண கூடியது ரோகிணி தான்.

அதனால் ரோகிணி தான் இந்த வேலையை பண்ணி இருப்பார் என்று முத்து கண்டுபிடித்து விடுவார். ஆனால் இந்த ரோகிணி எதற்காக சிட்டிக்கு அனுப்பி வைத்தார். சிட்டிக்கும் ரோகிணிக்கும் என்ன சம்பந்தம் என்று விசாரித்து பார்க்கும் பொழுது ஒவ்வொரு விஷயமாக முத்துவுக்கு கல்யாணி பற்றிய விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வரப்போகிறது. அந்த வகையில் ரோகினி தன் தலையிலேயே தானே மண்ணை வாரி போடும் அளவிற்கு பிரச்சனையில் மாட்டிக் கொள்ளப் போகிறார்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News