திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

Sirakadikkum Asai: முத்துவை பழிவாங்க சிட்டியுடன் கைகோர்க்கும் ரோகினி.. தனக்கு தானே சூனியம் வைத்த விஜயாவின் மருமகள்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து மீது எந்த தவறும் இல்லை என்று புரிந்து கொண்ட மீனா ஒயின்ஷாப்புக்கு போயி சிசிடிவி புட்டேஜ் மூலம் அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொண்டார். பின்பு இதை ரவி போனுக்கு அனுப்பி முத்துவை தேடி போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறார்.

என் கணவரை நான் சந்தேகப்பட்டு விட்டேன் என்று முத்துவை பார்த்ததும் மீனா கட்டிப்பிடித்து அழுது மன்னிப்பு கேட்கிறார். பிறகு ரவி அந்த வீடியோவை மறுபடியும் சமூக வலைதளத்தில் அனுப்பி யார் மீது தவறு இருக்கிறது என்பதை போட்டு காட்டும் விதமாக முத்துவை வைத்து பேச சொல்லி ரவி வீடியோ எடுத்து அனுப்புகிறார்.

இதை பார்த்த அண்ணாமலை நானும் என் மகன் முத்துவை புரிந்து கொள்ளவில்லை என்று கண்ணீர் விட்டு அழுகிறார். உடனே வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் இதை பார்க்க வேண்டும் என்று டிவியில் இந்த வீடியோவை போட்டு அனைவருக்கும் காட்டுகிறார் அண்ணாமலை.

ரோகிணிக்கு ஆப்பு தயாராக போகுது

இதனைத் தொடர்ந்து இந்த வீடியோவை போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி முத்து மீது தவறு இல்லை என்று மீனா மற்றும் ரவி நிரூபித்து விட்டார்கள். அடுத்து போலீஸ் சிட்டியை அரெஸ்ட் பண்ணி போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வருகிறார்கள். சிட்டி வந்ததும் என் மேலே தவறு இருக்கிறது. அதற்கு தண்டனையாக நான் ஒரு லட்ச ரூபாய் பணத்தை நஷ்ட ஈடாக கொடுக்கிறேன் என்று போலீஸிடம் சொல்கிறார்.

உடனே போலீஸ், முத்துவிடம் உனக்கு ஓகே தானே என்று கேட்கிறார். அதற்கு முத்து தவறு பண்ணிவிட்டு அதை பணத்தை கொடுத்து சரி செய்தால் எல்லாம் சரியாகிவிடுமா. இப்படி இருந்தால் தொடர்ந்து அவர்களுக்கு தப்பு பண்ண தான் தோன்றும். அதனால் தப்பு பண்ணும் பொழுது இனி தண்டனை கிடைக்கும் என்ற பயம் வர வேண்டும்.

எனக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் வேண்டாம் அவர் மீது புகார் கொடுக்கிறேன். நீங்கள் சட்டப்படி என்ன பண்ணனுமோ அதை செய்யுங்கள் என்று முத்து சொல்கிறார். இதற்கிடையில் முத்து தவறு பண்ணவில்லை என்று அண்ணாமலை போட்ட வீடியோவை பார்த்த ரோகிணி, லோக்கல் ரவுடி சிட்டியை பார்த்து இது நம் வட்டிக்கு கடன் வாங்கிய ஆளாச்சே. இவனுக்கும் முத்துக்கும் என்ன பிரச்சனை. ஏன் அவனை பழி வாங்குவதற்கு சிட்டி இந்த முயற்சியை எடுத்தான் என்று யோசிக்கிறார்.

பிறகு ஜெயிலில் இருக்கும் சிட்டியை பார்ப்பதற்கு ரோகிணி போகப் போகிறார். இவர்களுக்கு இருவருமே எதிரியாக இருக்கும் முத்துவை ஒன்று சேர்ந்து பழிவாங்க திட்டமிடப் போகிறார். ஆனால் இதுவரை தனியாக இருந்து ரோகிணி எல்லா பொய் பித்தலாட்டமும் பண்ணியதால் தான் மாட்டாமல் தப்பித்து இருக்கிறார்.

இப்பொழுது ரவுடி சிட்டியுடன் சேர்ந்து முத்துவை கவுக்க பிளான் பண்ணுவதால் கூடிய சீக்கிரமே ரோகினியின் முகத்திரை அனைவருக்கும் தெரிய வரப்போகிறது. இது தெரியாமல் தனக்குத்தானே ரோகிணி ஆப்பு தேடிப் போகிறார்.

- Advertisement -

Trending News