Japan Movie Review – கார்த்தியின் 25வது படம், ஜப்பான் எப்படி இருக்கு.? முழு விமர்சனத்தை கேட்டு அதிரும் இணையவாசிகள்

Japan Review: பொன்னியின் செல்வனில் வந்திய தேவனாக கலக்கிய கார்த்தி வித்தியாசமான கதைகளத்தை தேர்ந்தெடுத்திருக்கும் படம் தான் ஜப்பான். ஜோக்கர் படத்தின் இயக்குனர் ராஜு முருகன் இந்த படத்தை இயக்கியுள்ள நிலையில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்திருக்கிறார்.

ஏற்கனவே இந்த படத்தின் டீசர், பாடல் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ரெய்டு போன்ற படங்கள் வெளியாகி உள்ள நிலையில் அதற்கு போட்டியாக ஜப்பான் படமும் வெளியாகி இருந்தது. அதாவது கொள்ளை அடிப்பதில் கைதேர்ந்த திருவாரூர் முருகனின் கதையை அடிப்படையாக தான் இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது.

அதாவது கார்த்தி இந்த படத்தில் ஜப்பான் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கொள்ளையடிப்பதில் சிறு தடையும் இல்லாமல் கைதேர்ந்தவராக இருப்பவர் ஜப்பான். இந்நிலையில் ராயல் என்னும் தங்கக் கடையில் கிட்டத்தட்ட 200 கோடிக்கும் அதிகமான மதிப்பில் உள்ள நகைகள் கொள்ளையடிக்கப்படுகிறது.

Also Read : சுயமரியாதையை இழந்ததால் கொந்தளிப்புடன் பேசிய அமீர்.. நன்றியை மறந்த கார்த்தி

இந்த கடத்தலுக்கும் ஜப்பானுக்கும் சம்பந்தம் உள்ளதா என போலீசார் விசாரிக்கின்றனர். தற்போது கார்த்தி இந்த கொள்ளைக்கும் தனக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை என்றும் இதில் யார் ஈடுபட்டிருக்கிறார் என்பது தனக்கு தெரியும் என வேறு ஒருவரை கை காமிக்கிறார். உண்மையான கொள்ளையாளி யார் மற்றும் திருட்டு போன நகை கிடைத்ததா என்பதுதான் ஜப்பான் படத்தின் கிளைமேக்ஸ்.

ஆனால் ஜோக்கர் போன்ற ஒரு அற்புதமான படத்தை கொடுத்த ராஜு முருகனின் படம் தான் ஜப்பான் என்பது யோசிக்க முடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் கிளைமாக்ஸ் காட்சி எதிர்பார்க்காத வண்ணம் இருந்தாலும் பல இடங்களில் மிகுந்த தொய்வு ஏற்பட்டிருக்கிறது. கிரீன் பிளேபிலும் சில சொதப்பல்கள் வெளிப்படையாக தெரிகிறது. அதோடு மட்டுமல்லாமல் கார்த்திக்கு இது 25 ஆவது படம்.

மிகப்பெரிய வெற்றி கொடுப்பார் என எதிர்பார்த்த நிலையில் ஜப்பான் படம் அவரை தடுமாற்றம் அடைய வைத்துள்ளது. ஆனாலும் எப்போதும் போல கார்த்தி தன்னுடைய கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். ஆனால் தீபாவளி ரேசுக்கு ஏற்ற படம் ஜப்பான் என்பது சந்தேகம்தான்.

சினிமாபேட்டை ரேட்டிங் : 2.25/5

- Advertisement -spot_img

Trending News