செல்வராகவனை வைத்து சூரசம்காரம் செய்த பகாசூரன் பட விமர்சனம்.. அழுத்தமான விஷயத்தை சொல்லிய மோகன் ஜி

மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நடராஜ் ஆகியோர் நடிப்பில் சாம் சிஎஸ் இசையில் உருவாகி இருக்கும் பகாசூரன் படத்திற்கு ரசிகர்கள் மத்திய நல்ல வரவேற்பு கிடைத்த வருகிறது. மோகன் ஜியின் முந்தைய படங்கள் சாதியை அடிப்படையாகக் கொண்ட நிலையில் சமூக அக்கறையுடன் இந்த படத்தை எடுத்துள்ளார்.

அதாவது பகாசூரன் படத்தில் செல்வராகவன் அடுத்தடுத்த கொலையை செய்து வருகிறார். இந்தக் கொலைக்கான காரணம் தான் பகாசூரன் படத்தின் மையக்கதை. முன்னாள் ராணுவ மேஜரான நட்டி நடராஜனின் அண்ணன் மகள் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். இந்த தற்கொலைக்கான காரணத்தை நட்டி ஆராய்கிறார்.

Also Read : வாத்திக்கு போட்டியாக அழுத்தமான மெசேஜ் சொன்ன பகாசூரன்.. அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

அப்போது இளம் பெண்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்வதற்கான காரணத்தை அந்தக் குழந்தைகளின் பெற்றோரிடம் நட்டி விசாரிக்கிறார். அப்போது தான் அப்பாவி பெண்கள் மொபைல் போன் மூலம் வேறு தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள் என்பது தெரிகிறது.

ஒரு கட்டத்திற்கு மேல் அதிலிருந்து வெளிவர முடியாமல் மன அழுத்தத்தால் அந்த பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதற்கும் செல்வராகவன் செய்யும் கொலைக்கும் என்ன தொடர்பு. அதுதான் இரண்டாவது பாதியில் ஃபிளாஷ்பேக் காட்சி. அதாவது செல்வராகவனின் மகளும் இதே போன்ற பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டு இருப்பார்.

Also Read : 5 வயசுல தான் அண்ணன் தம்பி, அப்புறம் பங்காளி.. ஒரே நாளில் மோதிக் கொள்ளும் தனுஷ், செல்வராகவன்

ஆகையால் இளம் பெண்களை மொபைல் போன் மூலம் பணிய வைக்கும் நபர்களை செல்வராகவன் பலி வாங்கி வருகிறார். கடைசியில் நட்டி நடராஜ் செல்வராகவனை சந்திக்கும்போது என்ன ஆகிறது அதுதான் படத்தின் கிளைமேக்ஸ். கடைசியில் செல்வராகவனை வைத்து சூரசம்ஹாரமே செய்துள்ளார் இயக்குனர்.

ஒரு அழுத்தமான கதையை மோகன் ஜி எடுத்திருந்தாலும் சொல்ல வந்த விஷயங்களை முழுமையாக சொல்லவில்லை. எல்லா தவறுகளையும் ஒரே மொபைல் போனில் சொல்லிவிட முடியாது. எல்லா விஷயத்திலும் ஆக்கமும் உண்டு, அழிவும் உண்டு. மேலும் கதை கொஞ்சம் விறுவிறுப்புடன் சென்று இருந்தால் ரசிகர்களுக்கு சுவாரஸ்யம்  கூடுதலாக இருந்திருக்கும்.

Also Read : ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் செல்வராகவன்.. எல்லாம் அழுவ ரெடியா இருங்க

Next Story

- Advertisement -