fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பிரியங்கா மோகனிற்கு வாய்ப்புகளை அள்ளித்தரும் சிவகார்த்திகேயன்.. ஆஹா கதை அப்படி போகிறதா

sivakarthikeyan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரியங்கா மோகனிற்கு வாய்ப்புகளை அள்ளித்தரும் சிவகார்த்திகேயன்.. ஆஹா கதை அப்படி போகிறதா

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படம் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டு ஓரளவு லாபத்தை பெற்று தந்தது. அந்த படத்திற்கு அப்புறம் விரைவில் அவரது நடிப்பில் டான் படம் வெளியாக உள்ளது

சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் டாக்டர். அந்த படத்தில் நடித்தவர் பிரியங்கா மோகன்.இவர் ஆந்திராவில் பிறந்து வளர்ந்தவர் எப்படியாவது தமிழில் முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என முயற்சிகளை செய்து வருகிறார்.

திரைப்படங்களில் ஹோம்லி கேரக்டர்களில் சிறப்பாக நடித்து வரும் இவர் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்கும் “எதற்கும் துணிந்தவன்” படத்தில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

டாக்டர் படத்தில் இவரது நடிப்பும், அழகும் சிவகார்த்திகேயனை ரொம்ப கவர்ந்து விட்டதாம் அதனால் சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் டான் படத்திலும் அவரையே கதாநாயகியாக நடிக்க வைத்து விட்டார்.

Priyanka-mohan

Priyanka-mohan

சிவகார்த்திகேயனுக்கு வசூல் ரீதியாக டாக்டர் படம் ஒரு பெரிய லாபத்தை பெற்றுத் தந்தது. அதனால் அவருக்கிருந்த பண பிரச்சனையை ஓரளவு சமாளித்து விட்டார். அதனால் சென்டிமென்டாக பிரியங்கா மோகனயே அடுத்த படத்திலும் நடிக்க வைத்து விட்டார்

இந்நிலையில் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் தெலுங்கு படத்தில் இவரே கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் முடிந்த கையோடு அவர் நடிக்கவிருக்கும் படத்தின் சூட்டிங் ஆரம்பமாகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top