கவினை போல பிக் பாஸ் ராஜுக்கு அடித்த ஜாக்பாட்.. நாகேஷ் பட கதையின் அல்டிமேட் ரீமேக்

Bigg Boss Raju: கனா காணும் காலங்கள் என்ற நாடகத்தின் மூலம் விஜய் டிவிக்கு முதன்முதலாக நுழைந்தவர் ராஜு. அதன் பின் விஜய் டிவிலையே குப்பை கொட்டும் அளவிற்கு இதிலேயே இருந்து வந்தார். அப்படி இருந்ததனால் சரவணன் மீனாட்சி சீசன் 2 நிகழ்ச்சியில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதனை தொடர்ந்து ஆண்டாள் அழகர், நாம் இருவர் நமக்கு இருவர், பாரதி கண்ணம்மா, போன்ற நாடகங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

இதற்கிடையில் படங்களில் ஹீரோவின் நண்பராக ஒரு சில காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். நட்புனா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களில் முகத்தை காட்டி வந்தார். அடுத்ததாக காமெடி ராஜா கலக்கல் ராணி மற்றும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த பிறகு தான் ராஜு மிகவும் பிரபலமானார்.

முதல் படத்திற்கு பிள்ளையார் சுழி போட்ட ராஜு

இவருடைய டைமிங் காமெடி மற்றும் பொறுமை அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால்தான் டைட்டில் வின்னர் ஆகவும் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் இவருடைய நேரம் எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் விஜய் டிவியில் பிபி ஜோடிகள் மற்றும் ராஜு வீட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இப்படியே காலங்கள் ஓடிய நிலையில் தற்போது தான் எல்லாம் கைகூடி வந்திருக்கிறது என்று சொல்வதற்கு ஏற்ப ஹீரோவாக நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதே போல தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷன், பாலாஜி முருகதாஸ், முகின் போன்றவர்கள் சினிமாவில் கதாநாயகர்களாக நடித்து வருகிறார்கள். இவர்களுடைய லிஸ்டில் தற்போது ராஜூ இடம் பெற்றிருக்கிறார்.

அந்த வகையில் ராஜு ஹீரோவாக அறிமுகம் ஆகும் படத்தை இயக்குனர் ராகவ் மிர்தத் என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் கதையானது இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை மையப்படுத்தி காட்டும் விதமாக படம் உருவாகப் போகிறது. முக்கியமாக நாகேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படங்களின் கதையை போல இருக்கும் என்று இயக்குனர் ராகவ் கூறியிருக்கிறார்.

அப்படி ராஜு கமிட் ஆகிய படத்தின் டைட்டில் என்னவென்றால் பன் பட்டர் ஜாம். இதனைத் தொடர்ந்து பல வருடங்களுக்குப் பின் கிடைத்த இந்த அரிய வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி எப்படியாவது அடுத்த கட்டத்தை அடைந்து விட வேண்டும் என்று முழு முயற்சியுடன் ரொம்பவே டெடிகேஷன் உடன் இருக்கிறார். அந்த வகையில் இவர் நடிக்கப் போகும் இப்படம் எந்த அளவுக்கு மக்களிடம் ரீசாக போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

புது படத்தின் அப்டேட்

Next Story

- Advertisement -