ஜெயிலர் படத்திற்கு எக்கச்சக்க கண்டிஷன் போட்ட ரஜினி.. தெரியாமல் மாட்டிக்கொண்டு முழிக்கும் நெல்சன்

அண்ணாத்தே திரைப்படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இயக்குனர் KS ரவிக்குமார் திரைக்கதை எழுதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் கொடுக்கவில்லை.

கடந்த பத்து வருடங்களுக்கு முன்பே அதாவது எந்திரன் படத்திற்கு பிறகு சூப்பர்ஸ்டாரின் உடல்நிலை சற்று கூடுதல் கவனம் செலுத்தும் நிலையில் உள்ளது என அனைவரும் அறிந்ததே. உடல்நிலை தொய்வு காரணமாக ரஜினி ஆறு மாதங்களுக்கு மேலாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பினார். அதிலிருந்தே அவருடைய படப்பிடிப்பு ரொட்டின்ஸ் மாறிவிட்டது.

Also Read: என்னுடைய கடைசி படத்தை நீங்கதான் இயக்க வேண்டும்.. சூப்பர் இயக்குனருக்கு கோரிக்கை வைத்த ரஜினி

ரஜினி சூட்டிங், பட விழாக்கள் எங்கு சென்றாலும் அவருடைய மகள்களில் யாரவது ஒருவர் அவர் கூடவே இருக்கின்றனர். அதிகமான கூட்டம் கூடும் இடங்களிலும், பொது விழாக்களிலும் ரஜினி வருவதில்லை. வெளிநாடுகளில் படப்பிடிப்புகள் அதிகமாக நடைபெறுவதில்லை. அண்ணாத்தே திரைப்பட சூட்டிங்கின் போதே ரஜினியின் மகள்கள் அதிக கண்டிஷன் போடுவதாக அரசல் புரசலாக செய்திகள் வந்தன.

இப்போது ஜெயிலர் படத்தில் இந்த செய்திகள் உறுதியாகி உள்ளது. ரஜினி சூட்டிங்கில் கலந்து கொள்வதற்கு பல கண்டிஷன் போட்டு இருக்கிறாராம். அதாவது ரஜினி காலை 9 மணிக்கு சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து விட்டு மாலை ஆறு மணிக்கெல்லாம் கிளம்பி விடுவாராம். இரவு நேர படப்பிடிப்பிற்கு அவர் பங்கேற்க மாட்டாராம்.

Also Read: 10 வருடத்திற்கு முன்னால் இதே தேதியில் கைவிடப்பட்ட ரஜினியின் பிரம்மாண்ட படம்.. மீண்டும் எடுக்கப்படுமா?

எந்த காட்சிகளிலும் ரொம்பவும் அலட்டிக் கொள்ளாமல், ரிஸ்க் எடுக்காமல் ரிலாக்ஸாக நடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருப்பதாக ரஜினியே ஸ்பாட்டில் கூறியிருக்கிறார். இப்படியெல்லாம் நடித்தால் மட்டுமே ரஜினியால் ஓரளவுக்கு நார்மலாக இருக்க முடியுமாம்.

இத்தனை கண்டிசன்களையும் பாலோ செய்து படத்தை எடுத்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் நெல்சன் இருக்கிறாராம். கடந்த ஜூலையில் இந்த படத்திற்கான சூட்டிங் ஆரம்பித்தது. அனிருத் இசையமைக்கும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: அஜித், விஜய் கிட்ட பிடித்தது இதுதான்.. ஓபன் ஆக சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்