10 வருடத்திற்கு முன்னால் இதே தேதியில் கைவிடப்பட்ட ரஜினியின் பிரம்மாண்ட படம்.. மீண்டும் எடுக்கப்படுமா?

40 வருட காலமாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சரித்திரத்தை உருவாக்க கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஒவ்வொரு காலகட்டங்களிலும் பல போட்டியாளர்கள் வந்தாலும் சிங்கிள் சிங்கமாக தற்போது வரை நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறார்.

காலத்திற்கேற்ப ரசிகர்களின் ரசனைக்கேற்ப ரஜினி தன்னுடைய படங்களில் அவ்வப்போது செய்த மாற்றங்கள் தான் அவரை தற்போது வரை நம்பர் ஒன் நடிகராக வலம் வர வைத்துள்ளது என்கிறார்கள் கோலிவுட் வட்டாரங்கள்.

ரஜினி எல்லாவிதமான படைப்புகளிலும் நடித்துவிட்டார். ஆனால் சரித்திர படைப்புகளில் மட்டும் நடிக்க முடியவில்லை. அப்படி சரித்திர திரைப்படமாக உருவாக இருந்த ராணா திரைப்படம் பத்தாண்டுகளுக்கு முன் இதே தேதியில் பூஜை போடப்பட்டதுடன் கைவிடப்பட்டது.

அதற்கு காரணம் ரஜினியின் உடல்நிலை சரியில்லாமல் போனது தான். அதன்பிறகு கோச்சடையான் என்ற பெயரில் அனிமேஷன் படம் வந்திருந்தால் ரஜினி நேரடியாக சரித்திர படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது.

இதை நினைத்து தற்போதும் ரஜினிகாந்த் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கேஎஸ் ரவிக்குமாரை அழைத்து மீண்டும் ராணா பட கதையை கேட்டுவிட்டு, எப்படி வந்திருக்க வேண்டிய படம் என அவரிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

மீண்டும் ராணா திரைப்படம் உருவாக்குமா என்பது சந்தேகம்தான். அப்படியே உருவானாலும் அதில் ரஜினி நடிப்பாரா என்பது கேள்விக்குறிதான். வயது மற்றும் உடல்நிலை காரணம் கருதி மீண்டும் ராணா படம் உருவாவதற்கு நூறு சதவிகிதம் வாய்ப்பு இல்லை என்றே பேச்சுக்கள் வருகின்றன. ரஜினியை தவிர ராணா படத்தில் வேறு யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதை ரசிகர்கள் கமெண்டில் பதிவு செய்யலாம்.

rana-rajinikanth-cinemapettai
rana-rajinikanth-cinemapettai