என்னுடைய கடைசி படத்தை நீங்கதான் இயக்க வேண்டும்.. சூப்பர் இயக்குனருக்கு கோரிக்கை வைத்த ரஜினி

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக வலம் வந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய வயது முதிர்வின் காரணமாக இன்னும் சில வருடங்களில் படங்களில் நடிப்பதிலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளாராம்.

ரஜினியின் சினிமா கேரியர் நன்றாக சென்று கொண்டிருந்த போது அரசியலுக்கு வருவார், முதலமைச்சர் ஆவார் என பல பேச்சுக்கள் வந்து கொண்டிருந்தன. அதைப்போல் ரஜினியும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக தெரிவித்திருந்தார்.

பின்னர் அவருக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனதை தொடர்ந்து கட்சியும் இல்லை ஒன்றும் இல்லை என மொத்தமாக முழுக்கு போட்டுவிட்டு சினிமாவில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் உருவாகி வருகிறது.

கிட்டதட்ட ஒரு வருடங்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஓரிரு தினங்களில் மொத்தமாக முடிவடைய உள்ளது. ரஜினி தன்னுடைய வயது முதிர்வின் காரணமாக இன்னும் சில வருடங்களில் பல படங்களில் நடிப்பதில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளாராம்.

ஆனால் தன்னுடைய கடைசி படம் யார் இயக்க வேண்டும் என்பதை இப்போதே முடிவு செய்து விட்டாராம் ரஜினி. அவர் வேறு யாரும் இல்லை. நம்ம சிறுத்தை சிவா தான்.

சிறுத்தை சிவா அண்ணாத்த படத்தை எடுத்து வருவதைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய கடைசி படத்தை இவருக்கும் கொடுத்தால் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் படமாக கொடுத்து விடுவார் என சிவாவிடம் இது குறித்து பேசியதாக ரஜினி வட்டாரங்களிலிருந்து செய்திகள் வந்துள்ளன.

annaththe-rajini-cinemapettai
annaththe-rajini-cinemapettai