சன்னியாசியா போனாலும் சக்க போடு போடும் ஜெயிலர்.. குகைக்குள் பாபா வைரல் புகைப்படம்

Super Star Rajini: நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர்  படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி உலக அளவில் வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் 400 கோடியை கடந்து தற்போது ஜெயிலர் வசூல் வேட்டை ஆடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ரஜினி ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர் என்பது சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு நன்கு தெரியும். ஆனால் கொரோனா பரவல் மற்றும் தனது உடல்நிலை காரணமாக கடந்த நான்கு வருடங்களாக வெளியிடத்திற்கு செல்லாத ரஜினி, இப்போது மீண்டும்  மலைக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

Also Read: இமையமலையிலிருந்து வந்த ஸ்பீடில் ரஜினி ஆரம்பிக்க போகும் தலைவர்-171.. ரிலீசுக்கு நாள் குறித்த லோகேஷ்

தற்போது உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ்-இல் உள்ள தயானந்த சரஸ்வதி மடம், வியாசர் குகை, சரஸ்வதி நதி மறையும் இடத்திற்கு  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. அது மட்டுமல்ல ரஜினி பாபாஜியின் தீவிர பக்தர்.

இதனால் இமயமலை பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முறையும் பாபாஜி குகையில் தியானம்  செய்வதுதான் அவருக்கு மன நிறைவை அளிக்கும். அந்த வகையில் இந்த முறை மகாவதார் பாபாஜி குகைக்கு  செல்வதற்காக போலீஸ் பாதுகாப்புடன் சுமார் 2 மணி நேரம்  ரஜினி மலை ஏறிய புகைப்படம் தற்போது சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் கவனம் பெற்று இருக்கிறது.

Also Read: ஓரளவுக்கு மேல பேச்சே இல்ல வீச்சு தான்.. சொல்லி அடித்த சூப்பர் ஸ்டார், மிரட்டும் 5-ம் நாள் வசூல்

மேலும்  இவர் பாபா குகையில்  தியானம் செய்த புகைப்படங்களும் வைரலாக பரவுகிறது, அது மட்டுமல்ல  ரஜினி தனது இமயமலை பயணத்தை முடித்துவிட்டு இயக்குனர் ஞானவேல் இயக்கும்  தலைவர் 170  மற்றும் லோகேஷ் இயக்கும் தலைவர் 171 படங்களின் படப்பிடிப்பில்  கலந்து கொள்ளப் போகிறார்.

அதற்காக எனர்ஜி ஏற்றுவதற்காகவே இப்போது ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ளார்.ஏற்கனவே ஜெயிலர் படத்தில் தரமான சம்பவத்தை செய்த ரஜினி அடுத்தடுத்து இன்னும் இரண்டு படங்களில் தன்னுடைய ரசிகர்களுக்கு பிடித்தமான திரை விருந்தை அளிக்க வேண்டும் என்று முடிவுடன் இருக்கிறார்.

பாபாஜி குகையில் தியானம் செய்த சூப்பர் ஸ்டார்

rajini-1-cinemapettai
rajini-1-cinemapettai

Also Read: ஒரே நேரத்தில் ரெட்டை சவாரி செய்த ஜெயிலர் வர்மன்.. யாரும் அறிந்திடாத விநாயகனின் ஆரம்பம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்