இமையமலையிலிருந்து வந்த ஸ்பீடில் ரஜினி ஆரம்பிக்க போகும் தலைவர்-171.. ரிலீசுக்கு நாள் குறித்த லோகேஷ்

Thalaivar 171 Update: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த பத்தாம் தேதி வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த இந்திய சினிமாவிலும் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்துக் கொண்டிருக்கிறது. நேற்றைய நிலவரப்படி இந்த படத்தின் வசூல் 300 கோடியை தாண்டி விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.

ஜெயிலர் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ரஜினி இமயமலைக்கு சென்று விட்டார். கடந்த சில வருடங்களாக கொரோனா காரணமாக போகாமல் இருந்ததாகவும், தற்போது நிலைமை சரியாக இருப்பதால் இமயமலை போவதாகவும் அவரே அறிவித்திருந்தார். ரஜினி தற்போது இமயமலையில் இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. ரஜினியும் அங்கு ஜெயிலர் படத்தின் ரிலீஸ் மற்றும் அதன் வரவேற்பை பற்றி பேசும் வீடியோ ஒன்றும் வெளியானது.

Also Read:லோகேஷ் பட வில்லனா செத்திடுவாங்கன்னு தெரிஞ்சு, நடிக்க ஆசைப்படும் 4 ஹீரோக்கள்.. ஆசை யாரை விட்டுச்சு!

ஜெயிலர் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ரஜினி இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் அவருடைய 170 ஆவது படத்தைப் பற்றிய அப்டேட்டுகள் வெளியானது. ரஜினியும் இந்த படத்திற்கான டெஸ்ட் ஷூட் வேலைகளை முடித்து விட்டார். தற்போது லைக்கா இந்த படத்தில் நடிப்பதற்கான ஆர்டிஸ்ட்களுக்கு ஆடிசன் நடத்தி வருகிறது. இந்த நேரத்தில் தலைவர் 171 அப்டேட்டும் வெளியாகி இருக்கிறது.

தலைவர் 171 படம் ரஜினி மற்றும் லோகேஷ் கூட்டணியில் உருவாக இருப்பது உறுதியாகிவிட்டது. லியோ படத்தின் வேலைகளும் முடிந்து விட்டன. படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தின் வேலைகளை முடித்த கையோடு லோகேஷ் ரஜினி படத்திற்கான வேலைகளை ஆரம்பிக்க இருக்கிறாராம். மேலும் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்க இருக்கிறது.

Also Read:லியோவுக்கு கலாநிதி கொடுத்த கெடு.. அனிருத் ஐடியாவால் முழிக்கும் விஜய்

இந்த படம் நவம்பர் மாதம் தொடங்க இருப்பதால், தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஏதாவது தள்ளிப் போக வாய்ப்பு இருக்கிறதா என்ற சந்தேகம் ரஜினியின் ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால் ரஜினிகாந்த், தன்னுடைய 170 ஆவது படத்திற்கு கொடுத்திருக்கும் கால்ஷீட் 38 நாட்கள் தானாம். இந்த படம் ரொம்பவும் குறுகிய நாளிலேயே முடிக்கப்பட திட்டமிடப்பட்டு இருக்கிறது. அதன் பின்னர் ரஜினி 171 வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

ரஜினிகாந்த் இமயமலையில் இருந்து திரும்பியதும் அடுத்தடுத்து இந்த இரண்டு பட வேலைகளில் கலந்து கொள்ள இருக்கிறார். ரஜினி தன்னுடைய இளமை காலங்களிலேயே இப்படி அடுத்தடுத்து பட வேலைகளில் பிஸியானது இல்லையாம். தற்போது அடுத்தடுத்து படம் பண்ணுவது ஒரு வேளை தன்னுடைய மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வதற்காக அல்லது சினிமாவில் இருந்து ஓய்வை அறிவிப்பதற்கா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

Also Read:இந்த வருடம் வெளியான 5 படங்களின் முதல் நாள் வசூல்.. நம்பர் ஒன் இடத்தை விட்டுக் கொடுக்காத சூப்பர் ஸ்டார்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை