பீஸ்ட் மாதிரி நேரத்தில் கோட்டை விட்ட நெல்சன்.. ஜெயிலர் சென்சருக்கு பின் பயத்தில் ரஜினி

Actor Rajini: பீஸ்ட் படத்தின் கலவையான விமர்சனங்களுக்கு பிறகு ஜெயிலர் படம் மூலம் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என நெல்சன் கடுமையாக முயற்சி செய்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.

ஆனால் அதற்கு முன்பாகவே இப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. அந்த வகையில் இப்படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது நடைபெற இருக்கும் இசை வெளியீட்டு விழாவுக்கான எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கிறது.

Also read: சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு.? ரஜினியை முன்னிறுத்தி சன் பிக்சர்ஸ் செய்யும் பாலிடிக்ஸ்

இந்த சூழலில் இன்று ஜெயிலர் படத்திற்கான சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் யு/ஏ சர்டிபிகேட் பெற்றுள்ள இப்படத்தின் நீளம் 2 மணி நேரம் 48 நிமிடம் 44 நொடிகளாக இருக்கிறது. இந்த விஷயம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் நெருடலை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏனென்றால் பீஸ்ட் படத்தில் கூட கிளைமாக்ஸ் காட்சியில் தேவையற்ற சில விஷயங்கள் இடம்பெற்றிருந்தது. பொதுவாக 2 மணி நேரம் 30 நிமிடங்கள் தான் படத்தின் நீளம் இருக்கும். அதை தாண்டி சென்றால் அது பெரிய அளவில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தாது. எப்போது படம் முடியும் என்ற எண்ணத்தை தான் ஏற்படுத்தும்.

Also read: ஜெயிலரால் மொத்த சொத்தையும் இழந்து தயாரிப்பாளர்.. ரஜினியை மலைபோல் நம்பி வைத்த கோரிக்கை

அந்த வகையில் தற்போது ஜெயிலர் படத்தின் நீளம் அதிகமாக இருப்பது ரஜினிக்கும் சிறு பயத்தை கொடுத்திருக்கிறது. பீஸ்ட் படத்திற்கு வந்த நிலை இதற்கும் வந்து விடக்கூடாது என்று அவர் இப்போது சென்சார் சான்றிதழை பார்த்து தவிப்பில் இருக்கிறாராம்.

இதையெல்லாம் எதிர்பார்த்து தான் ஆரம்பத்திலேயே நெல்சனிடம் அவர் பல கண்டிஷன்கள் போட்டார். அதையெல்லாம் இயக்குனர் சரிவர செய்திருந்தாலும் நேரம் விசயத்தில் அவர் கோட்டை விட்டுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் ஜெயிலர் படத்தின் அதிகபட்ச நீளம் பின்னடைவை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also read: சோத்துலையும் அடிபட்டாச்சு, சேத்துலையும் அடிப்படனுமா?. ஜெயிலரால் வெளிநாடு புறப்பட்ட விஜய்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்