இயக்குனர் இமயம் படுமோசமாக இயக்கிய 6 படங்கள்.. பிரியாமணியை வைத்து கேவலமாக ஆடிய சைக்கோ ஆட்டம்

Directo Bharathiraja Flop Movies: தமிழ் சினிமாவில் பின்னணியிலான கதைகளத்தை கொண்ட படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் தான் இயக்குனர் இமயம் பாரதிராஜா. இவர் 80களில் நிறைய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்ட பாரதிராஜா இயக்கிய படங்களா இவையெல்லாம் எனக் கேட்கும் அளவுக்கு படுமோசமான 6 படங்களைஇயக்கி இருக்கிறார்.

அன்னக்கொடி: 2013 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர் மற்றும் லக்ஷ்மன் நாராயணன் நடிப்பில் வெளியான படம் தான் அன்னக்கொடி. இயக்குனர் இமயத்திற்கு ஏற்றவாறு கிராமத்து கதையம்சம் கொண்ட இந்த படத்தில் பாரதிராஜாவின் மகன் மனோஜும் சடையனாக வில்லன் கேரக்டரில் நடித்திருப்பார். இந்தப் படத்தில் காரியப்பட்டி, கரிசபட்டி கிராமத்தில் வாழ்ந்த ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனுக்கும், கள்ளச்சாராயம் விற்கக்கூடிய பெண்மணியின் மகளுக்கும் இடையேயான காதல்தான் அன்னக்கொடி படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.

பல ஆண்டுகளுக்கு முன் அந்தப் பகுதியில் நடந்த உண்மை சம்பவம் ஒன்றை கருவாக வைத்து தான் பாரதிராஜா இந்த படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கினார். இருப்பினும் இந்த படம் வழக்கம்போல் சாதி விட்டு சாதி திருமணம் செய்து கொள்ள நினைக்கும் காதலர்களின் போராட்டத்தை காட்டியதால் வசூல் ரீதியாக படு தோல்வியை சந்தித்தது.

Also Read: ஆபரேஷன் சக்சஸ் ஆனா நோயாளி செத்துட்டான்.. ஹிட்டான ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள், படத்தை பிளாப்பாக்கிய 5 இயக்குனர்கள்

கண்களால் கைது செய்: 2004 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் வெளியான ‘கண்களால் கைது செய்’ என்ற படத்தில் வசீகரன் மற்றும் பிரியாமணி இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படத்தில் மிகப்பெரிய கோடீஸ்வரனாக இருக்கக்கூடிய வசி, சிறு வயதிலேயே மன அழுத்தத்திற்கு ஆளாகி, தன்னுடைய வளர்ப்புதாய் சொன்ன கதையில் வரும் சிண்ட்ரெல்லா தான் பிரியாமணி என்று நினைத்துக் கொண்டு, அவரை வலுக்கட்டாயமாக காதலிக்க வைப்பார்.

ஆனால் வசியின் பர்சனல் செகரட்டரியாக இருக்கக்கூடிய பிரியாமணி அவரை காதலிக்க மறுத்ததால், ஒரு கட்டத்தில் வசி அவரை கொலை செய்து விடுகிறார். இவ்வளவு மோசமான சைக்கோ கதையை இயக்கி பாரதிராஜா வசூல் ரீதியாக படு தோல்வியை சந்தித்தார்.

ஈரநிலம்: பாரதிராஜா இயக்கத்தில் அவரது மகன் மனோஜ் மூன்றாவது முறையாக நடித்த படம் தான் ஈரநிலம். இதில் நந்திதா, ஜெனிபர், சுகாசினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இந்த படம் முழுக்க முழுக்க உறவுகள் மற்றும் தேசத்தின் மீதான அன்பை சுற்றிய படமாகும். இதில் கார்கில் போரில் ஒரு பெண் தன் இரு மகன்களையும் இழப்பார்.

அப்போது இளைய மகன் குடும்ப பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவதை இந்த படம் அழகாக காட்டியது. இந்த படத்தின் கதை இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக இருந்திருக்க வேண்டும். இதனால் இந்த படம் பாரதிராஜாவின் தோல்வி படங்களின் லிஸ்டில் சேர்ந்து விட்டது.

Also Read: சாதிய பெருமை பேசிய 7 தமிழ் படங்கள்.. நாட்டாமை படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் 

கேப்டன் மகள்: பாரதிராஜா இயக்கத்தில் ராஜா, குஷ்பூ, நெப்போலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த படம் தான் கேப்டன் மகள். இந்தப் படத்தில் திருமணமான தம்பதியர்களான கவிதா மற்றும் கல்யாண இருவரும் ஹனிமூன் செல்கின்றனர். அப்போது அவர்கள் தங்கி இருக்கும் விருந்தினர் மாளிகையில் விசித்திரமான விஷயங்கள் நடக்க தொடங்கும் போது அவர்களின் அமைதி குலைவது தான் இந்த படத்தின் கதை. இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத வகையில் இருந்ததால் பாரதிராஜாவின் படுதோல்வி படங்களின் லிஸ்டில் சேர்ந்து விட்டது.

தமிழ்ச்செல்வன்: பாரதிராஜா இயக்கத்தில் விஜயகாந்த், ரோஜா நடிப்பில் வெளியான இந்த படமும் வசூல் ரீதியாக படு தோல்வியை சந்தித்தது. இதில் நேர்மையான ஐபிஎஸ் அதிகாரியான தமிழ்ச்செல்வன் ஆராய்ச்சி மாணவியான பாத்திமாவை காதலிக்கிறார். பின்னர் ஒரு திருப்பம் காரணமாக அவர் ஒரு ஊழல் எம்எல்ஏவான வெடிமுத்து மற்றும் அவரது குடும்பத்தினரின் பகையை சம்பாதித்து, கடைசியில் அவர்களை எப்படி சட்டத்திற்கு முன் குற்றவாளியாக நிப்பாட்டுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

இந்த கதையைப் போன்ற நிறைய படங்களில் பார்த்துவிட்டதால் இந்த படத்தை பார்க்கும்போது எந்த சுவாரசியமும் இல்லாமல் போனது. இதனால் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களும் இந்த படத்திற்கு குவிந்தது.

Also Read: பீடா கடையில் வேலை பார்த்து வந்த நடிகர்.. பாரதிராஜா படத்தில் நடித்தும், தோல்வி முகம் காட்டிய பரிதாபம்

கொடி பறக்குது: ரஜினிகாந்த் நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் படு தோல்வியை சந்தித்த படம் தான் கொடி பறக்குது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அமலா நடித்தார். இதில் ஒரு மாபியா தலைவர் தனது சட்ட விரோத செயல்களை எதிர்த்த போலீசை சதி திட்டம் தீட்டி கொன்று விடுவார். பிறகு தனது தந்தையின் மரணத்திற்கு தலைவரே காரணம் என்பதை கண்டுபிடித்து அவரை பழிவாங்குவது தான் இந்த படத்தின் கதை. இந்த படமும் வசூல் ரீதியாக பாரதிராஜாவிற்கு படு தோல்வியை பெற்று தந்தது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்