அமலாவுக்கு பின் ரஜினியின் காதல் சர்ச்சையில் சிக்கிய கேரளத்து நடிகை.. விவாகரத்து நோட்டீஸ் வரை சென்ற கிசுகிசு!

நடிகர் ரஜினிகாந்த் ஒரு வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரமாகவும் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கி அதன் பிறகு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் ரஜினியின் தோற்றத்தினால் நிறைய நடிகைகள் அவருடன் நடிக்க மாட்டேன் என்று ஒதுங்கி இருக்கின்றனர். பின்னாளில் அவருடைய பெயரும், புகழும் அதிகமாக பல நடிகைகளுடன் காதல் கிசுகிசுவிலும் மாட்டினார் சூப்பர் ஸ்டார்.

நடிகைகள் ஸ்ரீதேவி, ஸ்ரீ பிரியா என அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப அவ்வப்போது ரஜினியை பற்றி கிசுகிசுக்கள் வந்தாலும், இன்று வரை தமிழ் மீடியாக்களாக இருக்கட்டும், தமிழ் சினிமா ரசிகர்களாக இருக்கட்டும் மறக்காத ஒரு சர்ச்சையான விஷயம் என்றால் அது நடிகை அமலாவுடன் ரஜினி கிசுகிசுக்கப்பட்டதுதான். இன்று வரை அந்த செய்தி அவ்வப்போது மீடியாவில் ட்ரெண்ட் ஆவது உண்டு.

Also Read:ரஜினி படத்தை தயாரிக்க போட்டிப் போடும் முதலாளிகள்… எவ்வளவு வேணாலும் சம்பளம் தர நாங்க ரெடி என்கிட்ட கொடுங்க!

நடிகை அமலா ரொம்பவும் வசீகரமான அழகு உடையவர். எந்த ஒப்பனைகளும் இல்லாமல் எதார்த்தமான முக அமைப்பும், உடலமைப்பும் கொண்டவர். குறுகிய காலமே தமிழ் சினிமாவில் இவர் இருந்திருந்தாலும் மிகப் பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றார். இவர் ஆங்கிலோ இந்தியனாக இருந்தும் அப்படியே தென்னிந்திய நடிகையின் தோற்றத்தை கொண்டவர். புகழின் உச்சியில் அமலா இருக்கும் போதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கிசுகிசுக்கப்பட்டார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவருடைய காதல் மனைவியான லதா ரஜினிகாந்த் இருவருக்கும் அப்போது கருத்து வேறுபாடு இருந்திருக்கிறது. லதாவும், ரஜினிகாந்தை சில காலம் பிரிந்து தனிமையில் வாழ்ந்திருக்கிறார். அந்த நேரத்தில் ரஜினி நடித்தது தான் ராகவேந்திரா திரைப்படம். அதன் பிறகு ரஜினிக்கு அமலாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் பொழுது அவரிடம் நெருங்கி பழகி இருக்கிறார். தொடர்ந்து இருவரும் அடுத்தடுத்து படங்களும் நடித்திருக்கின்றனர்.

Also Read:கொஞ்சம் தலைவருக்கு ரெஸ்ட் குடுங்க ஐயா.. ஜெயிலர் முடிந்தவுடன் தலைவர் கையில் எடுத்த புது அவதாரம்

இவர்கள் இருவருக்குள்ளும் காதல் இருப்பதாக செய்திகளும் வெளியாகத் தொடங்கின. இந்த நேரத்தில் ரஜினிகாந்த் அவருடைய மனைவி லதாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் கூட அனுப்பி இருக்கிறார். உடனே பதறிப் போன லதா ரஜினிகாந்த் இயக்குனர் கே பாலச்சந்தரிடம் சென்று முறையிட்டு இருக்கிறார். பாலச்சந்தரும் ரஜினியை நேரில் அழைத்து பேசிய இது தவறு என்று புரிய வைத்திருக்கிறார். அதன் பின்னர் அமலா உடனான உறவு முடிந்தது.

அதன்பின்னர் ரஜினிகாந்துடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை தான் ராதா. ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் இருவரும் சேர்ந்து நடித்ததால் இவர்கள் இருவரும் காதலிப்பதாக மீடியாக்கள் செய்திகள் பரப்ப தொடங்கின. இப்படியே தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்தால் பெண் ரசிகர்களிடையே தன்னுடைய மார்க்கெட் குறைந்து விடும் என்பதை உணர்ந்த ரஜினிகாந்த் உஷாராகி இது போன்ற எந்த வதந்திகளும் வராத அளவுக்கு பின்னாளில் பார்த்துக் கொண்டுள்ளார்.

Also Read:ரஜினியின் முழு நீள 6 காமெடி படங்கள்.. ஒரு மீசையை வைத்து தேங்காய் சீனிவாசனுக்கு பட்டைய போட்ட சூப்பர் ஸ்டார்

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -