ட்ராமாவை போட்டு கதிரிடம் டியூஷனுக்கு பெர்மிஷன் வாங்கிய ராஜி.. பாண்டியனை கவுக்க மீனா கொடுக்கும் ஐடியா

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி தன்னுடைய செலவை தானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக டியூஷன் எடுக்க முயற்சி செய்தார். ஆனால் அதற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்து பாண்டியன் டியூஷன் எடுப்பதற்கு முட்டுக்கட்டை போட்டு விட்டார். இதனால் ராஜிக்கு பணம் தேவை அதிகமாக இருக்கிறது என்று கதிர் தவறாக புரிந்து கொண்டு தொடர்ந்து கார் டிரைவர், புட் டெலிவரி செய்து விடாமல் உழைத்து வருகிறார்.

இதனை பார்த்த கோமதி, ராஜியை திட்டும் விதமாக எல்லாம் உன்னால தான். உனக்காக தான் என் பையன் இப்படி கொஞ்சம் கூட ஓய்வு இல்லாமல் உழைத்து வருகிறான். உன்னால இருக்கிற பணத்தை வைத்து படிக்க முடியாதா என்று வாய்க்கு வந்தபடி திட்டி விட்டார். இதனால் கோபப்பட்ட ராஜி, என்ன நெனச்சிட்டு இருக்காங்க எல்லாரும், நான் என்ன பண்ணினேன் எதற்கு என்னை திட்டுகிறார்கள் என்று புலம்பிக்கொண்டார்.

நினைத்ததை சாதித்துக் காட்டிய ராஜி

இந்த நேரத்தில் வீட்டுக்கு வந்த கதிர், பணத்தை எடுத்து ராஜியிடம் கொடுக்கிறார். இன்னும் இதை பார்த்து கோவப்பட்ட ராஜி, நீ பணத்தை கொடுத்ததும் நான் வெட்கமே இல்லாமல் வாங்கி விடுவேனா? எல்லாரும் என்ன பத்தி என்ன நினைக்கிறீங்க, உனக்கு சூடு சொரணை இருக்கிற மாதிரி தான் எனக்கும் ரோசம் இருக்கும். நீ எப்படி உங்க அப்பா கிட்ட வீம்பு பிடிச்சு வேலைக்கு போய் சம்பாதிக்கணும்னு ஆசைப்படுறியோ?

அதே மாதிரி தான் நானும் என்னுடைய செலவுக்கு நான் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் இதை யாரும் புரிந்து கொள்ளாமல் எல்லோரும் என்னை திட்டுகிறார்கள். நீயும் என் மேல் கோபப்படுகிறாய் என்று சொல்லி நான் எல்லா உண்மையும் என் அப்பாவிடம் சொல்லப் போகிறேன் என வெளியே வந்து அப்பா அம்மாவை கூப்பிடுகிறார்.

எங்கே ராஜி உண்மை சொல்லி பிரச்சினையாகி விடுமோ என்று கதிர் தடுக்க பார்க்கிறார். இதையெல்லாம் பார்த்து மீனா, ராஜி உண்மை சொல்லிவிட்டால் உங்க அப்பா உங்க அம்மாவ சும்மா விட மாட்டாங்க. நீ எப்படியாவது போய் தடு என்று ராஜியை தடுக்க சொல்கிறார். பிறகு ராஜி வீட்டில் முன் நின்று கத்திய பொழுது அம்மா அப்பத்தா வந்து என்ன ஆச்சு ஏன் கத்துகிறாய் என்று கேட்கிறார்கள்.

நான் டியூஷன் எடுத்தால் உங்க பிள்ளைகளுக்கு என்ன வந்துச்சு. ஏன் தேவையில்லாமல் பிரச்சனை பண்ணினாங்க. அவர்களை பார்த்து நான் கொஞ்சம் பேசணும் என்று சொல்கிறார். அதற்கு அப்பத்தான் அவங்க இங்கே இல்லை, வெளியே போயிருக்காங்க என்று சொல்லிய நிலையில் ராஜி நான் அவர்களை அங்கேயே போய் பார்த்து பேசுகிறேன் என்று வெளியே கிளம்பி விடுகிறார்.

இதனை தடுக்கும் பொருட்டாக கதிர், ராஜி பின்னாடியே போகிறார். போனதும் உனக்கு என்னதான் பிரச்சனை ஏன் இப்படி நடந்து கொள்கிறாய் நான் என்ன பண்ணனும் என்று கேட்கிறார். அதற்கு ராஜி நான் என்ன சொன்னாலும் சரி என்று சொல்லுவியா என்று டிமான்ட் பண்ணுகிறார். உடனே கதிர் என்ன பண்ணனும் சொல்லு என்று கேட்கும் பொழுது நான் டியூஷன் எடுக்க வேண்டும் அதற்கு உன்னுடைய சம்மதம் வேணும் என்று கேட்கிறார்.

கதிருக்கு வேற வழியில்லாததால் ராஜி டியூஷன் எடுப்பதற்கு பெர்மிஷன் கேட்டதும் கதிர் கொடுத்து விடுகிறார். இதற்கு அடுத்தப்படியாக பாண்டியனையும் சம்மதிக்க வைக்கும் விதமாக மீனா, ராஜிக்கு ஒரு ஐடியா கொடுக்கப் போகிறார். அந்த ஐடியா படி பாண்டியனும் டியூஷன் எடுப்பதற்கு சம்மதத்தை கொடுத்து விடுவார். இதனைத் தொடர்ந்து கதிர் ராஜி பிரச்சினை முடிந்த நிலையில் அடுத்ததாக ரொமான்ஸ் காதல் என்று அடுத்த கட்ட சீன்கள் வரப்போகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News