செந்திலை பயமுறுத்தி அடிபணிய வைத்த மீனா.. ராஜியின் காதலை புரிந்து கொள்ள கதிருக்கு கிடைத்த சந்தர்ப்பம்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், மீனாவிடம் கோபமாக இருந்த பாண்டியனை சென்டிமென்டாக பேசி கவிழ்த்து விட்டார். அத்துடன் மாமனாரின் ஐம்பதாவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று வீட்டிற்கு வந்த மூன்று மருமகள் ஆசைப்படுகிறார்கள். அதனால் சர்ப்ரைஸ் ஆக எல்லாத்தையும் பண்ணலாம் என்று மூன்று மருமகள் சேர்ந்து டிரஸ் பொருள்கள் வாங்க போய் விட்டார்கள்.

இதற்கு இடையில் மீனாவிடம் கோவப்பட்டு இருக்கும் செந்தில் எப்படியாவது திரும்பப் பேச வேண்டும் என்று மீனா மறுபடியும் அவருடைய ராஜதந்திரத்தை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் மீனா கடையில் டிரஸ் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது செந்திலுக்கு மெசேஜ் அனுப்புகிறார். இனிமேல் என்னிடம் பேசுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு வரவே வராது.

அனைத்து ராஜதந்திரங்களையும் பயன்படுத்திய மீனா

நான் உங்களை விட்டு போகிறேன் என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பி போனை சுவிட்ச் ஆப் பண்ணி விடுகிறார். இதை கேட்டதும் செந்தில் பதட்டத்துடன் மீனாவை தேடி பார்க்கிறார். அப்பொழுது நடந்த விஷயத்தை கதிரிடம் சொல்லிய நிலையில் செந்தில் மற்றும் கதிர் இருவரும் சேர்ந்து மீனாவை தேடி அலைகிறார்கள். மீனா வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு சென்று செந்தில் விசாரிக்கிறார்.

அங்கே மீனா வேலைக்கு வரவில்லை என்று சொல்லிய நிலையில் வீட்டிற்கு போன் பண்ணி அம்மாவிடம் மீனா வந்து விட்டாளா என்று கேட்கிறார். அதற்கு கோமதி இன்னும் வரவில்லை ஏன் என்னாச்சு என்று கேட்கும் பொழுது ஒன்னும் இல்லை சும்மாதான் கேட்டேன் என்று சமாளித்து விடுகிறார். பிறகு தொடர்ந்து மீனாவுக்கு போன் பண்ணிக் கொண்டிருக்கும் செந்திலுக்கு மறுபடியும் மீனா போன் பண்ணுகிறார்.

அப்பொழுது செந்தில் பதட்டத்துடன் எங்கே இருக்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு மீனா நான் பஸ் ஸ்டாண்டில் இருக்கிறேன் என்று சொல்லிய நிலையில் கதிர் செந்திலை கூட்டிட்டு அங்கே போகிறார். மீனாவை பார்த்து என்னை விட்டு ஒரேடியாக போய்விடலாம் என்று முடிவு பண்ணி விட்டாயா. நீ இல்லாமல் என்னால் இருக்க முடியுமா என்பதை கொஞ்சமாவது யோசித்து பார்த்தியா என்று மொத்த அன்பையும் காட்டும் விதமாக உருகி உருகி செந்தில் பேசுகிறார்.

அந்த வகையில் எப்படியோ செந்திலுக்கு போட்ட தூண்டிலும் சரியாக சிக்கிவிட்டது. இதையெல்லாம் பார்த்த கதிர், ராஜி மனசையும் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்வதற்கு முயற்சி எடுக்கிறார். ஏற்கனவே ராஜிக்கு காதல் வந்துவிட்டது. அதே மாதிரி கதிருக்கும் காதல் வந்துவிட்ட நிலையில் இருவரும் அதை வெளிப்படுத்த தெரியாமல் முட்டி மோதிக் கொள்கின்றார்கள்.

தற்போது மீனா மற்றும் செந்திலின் காதலை பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக கதிர் மற்றும் ராஜிக்கும் அது புரிந்து விட்டது. கூடிய விரைவில் கதிர் அவருடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக ராஜியை புரிந்து கொள்ளப் போகிறார். இதனை தொடர்ந்து இனி அடுத்து வரும் காட்சிகளில் ராஜி மற்றும் கதிரின் சீன்கள் தான் அதிகமாக இருக்கப் போகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News