என்னத்த படிச்சு கிழிக்கப் போற ஐபிஎஸ் சந்தியா.. போர்க்களமாக மாறிய ராஜா ராணி 2

விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலின் கதாநாயகி சந்தியா, இறந்துபோன தன்னுடைய தாய்-தந்தையின் கனவை நிறைவேற்ற வேண்டும் என கணவரின் துணையுடன் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவில் படித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் இதற்கு சந்தியாவின் மாமியார் சிவகாமி சம்மதம் தெரிவிக்காததால், சரவணன் தன்னுடைய அம்மாவுக்குத் தெரியாமல் சந்தியாவை பயிற்சி வகுப்பிற்கு அனுப்புகிறார். எதிர்பாராத விதமாய் சிவகாமிக்கு சந்தியா படிப்பது தெரிந்தது வீடே ரணகளம் ஆனது.

சிவகாமியை சமாதானப்படுத்த சந்தியா மற்றும் சரவணன் இருவரும் சிவகாமியின் காலை பிடித்து கெஞ்சினாலும் அவர் சமாதானம் ஆகவில்லை. ஒரு கட்டத்தில் சரவணன் சந்தியாவிற்காக தன்னுடைய அம்மாவை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

அதன் பிறகு ஸ்வீட் கடையில் தங்கியிருக்கும் சந்தியா மற்றும் சரவணன் இருவரையும் கட்டுப்பாடுகளுடன் சிவகாமி வீட்டிற்குள் விடுகிறார். அதாவது சிவகாமியுடன் சந்தியா பேசக்கூடாது. சந்தியா வீட்டில் இருக்கும் எல்லா வேலைகளையும் பார்க்க வேண்டும்.

மூன்று முறைக்கு மேல் ஏதாவது தவறு செய்தால் நிச்சயம் சந்தியா ஐபிஎஸ் கனவை தூக்கி எறிந்து விட வேண்டும் என சிவகாமி சந்தியாவிற்கு கட்டளையிடுகிறார். இந்த கட்டளைகளை ஏற்றுக் கொண்ட சந்தியா, சிவகாமியை மட்டும் தன்னுடன் பேசும்படி கெஞ்சுகிறாள்.

உடனே சிவகாமி, ‘நீ எப்படி ஐபிஎஸ் படிச்சு கிழிக்கிய போறேன்னு நான் பாக்குறேன். இனிமேல் இது வீடு அல்ல போர்க்களம்’ என அர்ச்சனாவை விட படு வில்லியாக சிவகாமி மாறுகிறார். இனிமேல் சந்தியா சிவகாமியை எப்படி சமாளித்து தன்னுடைய ஐபிஎஸ் கனவை நிறைவேற்றுகிறார் என்பதுதான் சவால்.

Next Story

- Advertisement -