ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பாக்கியா மூடுறா கேட்ட, வேற லெவல் கெத்து.. அசிங்கப்பட்டு நடுத்தெருவுக்கு போன ராதிகா கோபி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடரில் கோபியிடம் விட்ட சவாலில் ஜெயிப்பதற்காக பாக்கியா கல்யாண ஆர்டரை எடுத்து நல்லபடியாக முடித்து விட்டார். இன்னும் மீதமுள்ள தொகைக்கு என்ன பண்ணப் போகிறார்? கோபியிடம் விட்ட சவாலில் ஜெயித்து விடுவாரா என்ற எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு தற்போது வெளிவந்த பிரமோ, ரிப்பீட் மூடில் பார்க்க வைத்திருக்கிறது.

அதாவது கண்டிப்பாக பாக்கியா நம்மிடம் தோற்று நிற்கப் போகிறார் என்று பகல் கனவு கண்டிருந்தார்கள் கோபி ராதிகா. அதற்காக பாக்கியவை பார்க்கும் பொழுதெல்லாம் சீண்டிக்கொண்டே இருந்து வந்தார்கள். முக்கியமாக கோபி, பாக்கியாவின் கல்யாண ஆர்டரை சொதப்ப வேண்டும் என்பதற்காக தில்லாலங்கடி வேலை எல்லாம் பார்த்து வந்தார்.

Also read: ஒரு எபிசோடுக்கு பாக்கியலட்சுமி சீரியல் கதாபாத்திரங்கள் வாங்கும் சம்பளம்.. அடேங்கப்பா தல சுத்துது

ஆனால் அதையெல்லாம் முறியடித்து பாக்கியா ஜெயித்துவிட்டார். பின்பு மீதமுள்ள பணம் ரெடி பண்ணாமல் திண்டாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது கோபி, ஒரு மாசத்துல 18 லட்சத்தை தூக்கி அடிக்கிறேன் என்று சவால் விட்டெல்லா, இப்ப என்ன பண்ணப் போறீங்க மேடம் என்னிடம் வந்து கெஞ்ச போறீங்களா என்று நக்கலாக பேசுகிறார்.

அதற்கு அருணாச்சலம் பட ஸ்டைலில் பாக்கியா வீட்டுக்குள் நுழைந்து மொத்த 18 லட்சத்தையும் எடுத்துட்டு வந்து உங்களுக்கு நான் கொடுக்கிறேன் என்று சொன்ன பணம். எவ்வளவு இருக்கு என்று எண்ணிப் பார்த்துக்கோங்க என சொல்லிக் கொடுக்கிறார். ஜெயித்து விட்டாலே அதுவும் தனி ஒருவராக இருந்து போராடி ஜெயித்த பின்பு வரும் ஒரு தைரியம் தன்னம்பிக்கைக்கு தனித் திமிரை உண்டு.

Also read: வெட்கம் கெட்டு திரியும் குணசேகரன்.. நாக்கை தொங்க போட்டு அலையும் கரிகாலன்

அது பாக்யாவிடம் கெத்தாகவே இருந்தது. அந்த கெத்துடன் எனக்கு சுயமரியாதை ரொம்ப முக்கியம் என்று நினைக்கிறவள். அதனால் கொடுத்த பணத்தை ரெண்டு பேரும் வாங்கிட்டு ஒழுங்கு மரியாதையாக வீட்டை விட்டு வெளியே போங்க என்று சொல்கிறார். அதற்கு அப்புறமும் மானங்கெட்ட போய் அங்க இருக்க முடியுமா? அதனால் ராதிகா இனி மேலும் நம்ம இங்கே இருந்தால் நல்லா இருக்காது என்று கோபியை கூட்டிட்டு நடுத்தெருவுக்கு வந்து விடுகிறார்.

அப்பொழுது பாக்கியா வீட்டில் இருந்து அனைவரும் வாசல் வரை வந்து பார்க்கிறார்கள். அந்த நேரத்தில் யாருமே எதிர்பார்க்காத படி பாக்கியா சொன்னதுதான் அனைவரையும் ரிப்பீட் மூடில் பார்க்க வைத்து புல்லரிக்க செய்தது. அதாவது நடுத்தெருவுக்கு சென்ற ராதிகா மற்றும் கோபி திரும்பி பார்த்த பொழுது அந்த நொடியில் மூடுறா கேட்ட என்று பாக்கியா சொன்னது வெறித்தனமாக இருந்தது.

Also read: இது என்னடா குணசேகரனுக்கு வந்த சோதனை.? துண்டக் காணும் துணிய காணோம்னு ஓடிப்போன ஜான்சி ராணி

- Advertisement -

Trending News