யாரு பவர்ஃபுல்னு ஒரு கை பார்த்து விடலாமா.. சக்காளத்தி சண்டையை ஆரம்பித்த பாக்கியா ராதிகா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில் இரண்டு பொண்டாட்டி, ரெண்டு புருஷன் கதையை வைத்தே உருட்டிக் கொண்டு வருகிறார்கள். இதற்கு இடையில் அவ்வப்போது சக்காளத்தி சண்டை வேற கொழுந்து விட்டு எரிகிறது. அந்த வகையில் பாக்கியா மீது தீராத வன்மத்துடன் பழிவாங்க நினைக்கிறார் ராதிகா. இவர் கேட்ட மாதிரி கோபியும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பாக்யாவை அவமானப்படுத்திக் கொண்டு வருகிறார்.

தற்போது ராதிகாவிற்கு கொத்தாக ஒரு விஷயம் கிடைத்துவிட்டது. அதாவது ராதிகாவின் கம்பெனி ஓனர் இரண்டு மாதங்களுக்கு வெளிநாடு சென்றிருக்கிறார். ஆனால் போகும் போது ராதிகாவை கூப்பிட்டு நான் வரும்வரை இந்த கம்பெனி உங்கள் பொறுப்பு நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.

Also read: பாக்யாவை காலி பண்ண நினைக்கும் திருட்டு கோபி.. எழிலிடம் கையும் களவுமாய் மாட்டிய ராதிகாவின் கணவர்

சும்மாவே ராதிகா ஓவரா ஆட்டம் போடும், தற்போது அதற்கு ஏற்ற மாதிரி காலில் சலங்கை கட்டி விட்டாச்சு இனிமேல் சந்திரமுகி மாதிரி பேய் ஆட்டம் ஆட போகிறார். அந்த வகையில் ராதிகாவின் ஆபீஸில் கேண்டினில் வேலை பார்த்து வந்த பாக்கியவை, உங்கள் கேண்டீன் காண்ட்ராக்ட் முடிந்துவிட்டது. இதற்குப் பிறகு நாங்கள் வேறு ஒருவரை தேர்வு செய்து கொள்கிறோம் நீங்கள் மூட்டை முடிச்செல்லம் கட்டிக்கொண்டு ஆபீஸ் விட்டு வெளியே போங்க என்று பாக்யாவிடம் சொல்கிறார்.

உடனே பாக்கியா எங்களுடைய சமையலில் எந்தவித குறையும் இல்லையே, அதனால் எங்களின் காண்ட்ராக்டை இன்னும் அதிகரித்துக் கொள்ளலாமே என்று சொல்கிறார். ஆனால் எதையுமே காது கொடுத்து கேட்காமல் ராதிகா நான் பிடிச்ச முயலுக்கு மூணு கால் என்பது போல் பாக்கியவை வெளியே அனுப்புவதற்கு தீர்மானமாக இருக்கிறார்.

Also read: பாக்யாவின் அடிமடியில் கை வைத்த சக்காளத்தி.. அசிங்கப்பட்டு போன கோபி

அப்பொழுது செல்வி அக்கா உங்க ஆபீஸில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் கேட்டுப் பாருங்கள் அவர்களுக்கு எங்களுடைய சாப்பாடு தான் ரொம்பவே பிடிக்கும் என சொல்கிறார். அதற்கு ராதிகா ஓட்டிங் நடத்தலாம். அதில் உங்களுக்கு அதிகம் பேர் வாக்களித்தால் நீங்கள் இங்கே தொடர்ந்து சமைக்கலாம் என்று சொல்கிறார். ஆனால் இது என்னுடைய ஆபீஸ் அதனால எனக்கு தான் அவர்கள் முழு பங்களிப்பையும் கொடுப்பார்கள்.

அப்பொழுது உங்களுக்கு யார் பவர் புல் என்று தெரியும் என ராதிகா சவால் விடுகிறார். இதன் மூலம் பாக்கியாவை தோற்கடிக்க வேண்டும் என்று ராதிகா அவருடைய நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள திட்டம் தீட்டுகிறார். இதற்கிடையில் கோபியும் அவருடைய பங்குக்கு பாக்கியாவை பார்த்து கிண்டல் அடித்து பேசுகிறார். ஆனால் எப்படியும் வழக்கம் போல் ராதிகா மற்றும் கோபி மூஞ்சியில் பாக்கியா கரியை பூச போகிறார்.

Also read: மொத்த குடும்பத்திடமும் அசிங்கப்பட போகும் கோபி.. தலை தப்பிய பாக்யா

- Advertisement -