6 மாசம் என்னோட உறவிலிருந்த, உன் ரேஞ்சே வேற.. பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகளுக்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்த தயாரிப்பாளர்

அட்ஜஸ்ட்மென்ட் தொல்லைகள் தலை விரித்தாடும் திரை உலகில் சின்னத்திரையும் விதிவிலக்கல்ல. அங்கும் ஹீரோயின்கள் முதல் துணை நடிகைகள் வரை பலருக்கும் இது போன்ற டார்ச்சர் சம்பவங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிக்கும் நடிகைக்கும் இது போன்ற சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்தவர் விஜே சித்ரா. அவருடைய திடீர் மரணத்திற்கு பிறகு அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் காவியா. சித்ரா அளவுக்கு இவர் இல்லை என்றாலும் ரசிகர்கள் இவருடைய நடிப்பை ஏற்றுக் கொண்டனர்.

Also read : பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக நடிக்கப் போவது யார் தெரியுமா? காவியா வெளியேற காரணம் இதுதான்

ஆனால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருப்பதால் தற்போது இந்த கதாபாத்திரத்திற்கு மூன்றாவதாக ஒரு ஆள் மாற்றப்பட்டு நடித்து வருகிறார். ஏற்கனவே விஜய் டிவியில் சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்து பிரபலமான லாவண்யா தற்போது முல்லையாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் நடிக்க வந்த புதுசில் தயாரிப்பாளர் ஒருவர் இவருக்கு அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் கொடுத்திருக்கிறார். அதாவது என்னுடன் ஆறு மாதம் மட்டும் நீ வாழ்ந்தால் உன்னுடைய ரேஞ்சையே மாற்றி காட்டுகிறேன் என்று அந்த தயாரிப்பாளர் இவரிடம் அநாகரீகமாக பேசி இருக்கிறார்.

Also read : பாண்டியன் ஸ்டோர்ஸ் விட்டு விலகும் முக்கிய நடிகை.. டி ஆர் பி-க்கு வச்சாங்க ஆப்பு

அதாவது அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தையை மறைமுகமாக கூறிய அந்த தயாரிப்பாளர் தன்னுடன் லாவண்யா ஆறு மாசம் மட்டும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அவர் எந்த விதமான பதிலும் கூறாமல் அவரை தவிர்த்திருக்கிறார்.

அதன் பிறகு எப்படியோ கஷ்டப்பட்டு வாய்ப்புகள் பெற்று தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் அவர் இந்த விஷயத்தை பெரிது படுத்தினால் தன்னுடைய திரை வாழ்வுக்கு சிக்கலாகும் என்று அதை அமைதியாகவே கடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Also read : நேர்மைக்கு பெயர் போன பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இப்படி ஒரு தம்பியா? தலைகுனிய போகும் குடும்பம்