பாண்டியன் ஸ்டோர்ஸ் விட்டு விலகும் முக்கிய நடிகை.. டி ஆர் பி-க்கு வச்சாங்க ஆப்பு

விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகளின் பாசப் பிணைப்பை அழகாக காட்டுவதால் இந்த சீரியலுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முக்கிய கதாபாத்திரம் இன்றுடன் விலகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இந்த சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தை இரண்டு முறை மாறிய நிலையில், தற்போது முக்கிய கதாபாத்திரமான முல்லை கேரக்டரையும் மாற்ற போகின்றனர். முல்லை கதாபாத்திரத்தில் முன்பு விஜே சித்ரா மிக சிறப்பாக நடிக்கும் நிலையில், அவரது மறைவுக்குப் பிறகு காவியா அறிவுமதி அந்த சீரியலில் கொஞ்சம் செல்லமாக ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

Also Read: பிக் பாஸில் மாஸ்டருக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்த காதலி.. மேடையில் நன்றி மறந்த மனுஷன்

தொடக்கத்தில் காவியாவை ஏற்றுக்கொள்ளத் தயங்கிய ரசிகர்கள், அதன்பிறகு சமீபத்தில்தான் அவரை முல்லையாக ஏற்றுக்கொண்டு கொண்டாடினார்கள். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு இவ்வளவு வரவேற்பு கிடைப்பதற்கு முல்லை-கதிர் ரொமான்ஸ் தான் முக்கிய காரணமாக அமைந்தது.

இந்நிலையில் காவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்களின் புகைப்படத்தை பதிவிட்டு அதில் ‘Bye Dears’ என்றும் குறிப்பிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து காவியா, முல்லை கதாபாத்திரத்தில் நடிப்பது இன்று தான் கடைசி நாள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

Also Read: தீபாவளிக்கு ஒளிபரப்பாகும் 5 படங்கள்.. சூப்பர் ஸ்டார் படம் இல்லாத ஒரே வருத்தம் தான்

ஏற்கனவே விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலின் கதாநாயகியின் ரோஷினி ஹரிப்ரியன், அஞ்சலி, அகில் அதைத்தொடர்ந்து ராஜா ராணி2 சீரியலில் ஆலியா, வில்லி அர்ச்சனா உள்ளிட்டோர் விலகியதால் இந்த இரண்டு சீரியல்களும் டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் டாப் 5 இடத்திலிருந்து தூக்கி எறியப்பட்டது.

அதைத் தொடர்ந்து தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முக்கிய கேரக்டரான முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியா அறிவுமதியும் விலகினால் நிச்சயம் அது விஜய் டிவியின் டிஆர்பி-க்கு வச்ச பெரிய ஆப்பு தான்.

Also Read: விஜய் டிவியின் டிஆர்பி-யை நொறுக்க சன் டிவி போட்ட பிளான்.. கைகொடுக்குமா தளபதியின் படம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்