கல்யாணம் முடிஞ்ச கையோடு தேரை இழுத்து தெருவில் விட்ட பிரேம்ஜி மனைவி.. வைரலாகும் புகைப்படம்

Premji: சும்மா இருக்கும் வாய்க்கு அவுல் கொடுத்து மெல்ல விட்ட கதை என்று சொல்வார்கள். அதைத்தான் பிரேம்ஜியின் மனைவி இந்து செய்திருக்கிறார். திருமணம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஒரு பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது என்று சொன்னால் மிகை ஆகாது.

அட எந்த வயசுலயும் கல்யாணம் பண்ணலாம், பிரேம்ஜியை பார்த்ததும் அந்த நம்பிக்கை வந்துடுச்சு என ஆறுதல் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் எனக்கு வரப்போற பொண்டாட்டி எந்த பால்வாடியில் படித்துக்கொண்டு இருக்கிறாளோ என்றெல்லாம் கலாய்க்கும் அளவுக்கு இந்த தம்பதியரின் வயது வித்தியாசமும் இருக்கிறது.

சேலத்தில் வங்கி ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த இந்து, பிரேம்ஜியை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு தான் அவர் சமூக வலைத்தளத்தில் ரொம்பவும் ஆக்டிவாக இருக்கிறார். கல்யாணம் முடிஞ்ச கையோடு பிரேம்ஜி சமைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

ஆனால் இது என்னப்பா இவங்களும் இந்த வேலை ஆரம்பிச்சிட்டாங்க என ரசிகர்கள் நொந்து கொண்டார்கள். அது மட்டுமில்லாமல் ட்ரெண்டிங் ரீல் செய்கிறேன் என்ற பெயரில் பங்கமாக ஒரு விஷயத்தை பண்ணியிருக்கிறார்.

தேரை இழுத்து தெருவில் விட்ட பிரேம்ஜி மனைவி

நான் ஏன் என் கணவரை முன்னாடியே சந்திக்கவில்லை என்ற கேள்வியோடு அந்த ரீல் ஆரம்பிக்கிறது. அதில் 1998 இல் பிரேம்ஜிக்கு 20 முதல் 23 வயதுக்குள் இருக்கும் புகைப்படம் ஒன்றும், அதே வருடத்தில் இந்து மூன்று வயதில் எடுத்த புகைப்படம் ஒன்றையும் இணைத்து போட்டிருக்கிறார்.

இதன் மூலம் வயது வித்தியாசத்தை ஊர்ஜிதப்படுத்தி பிரேம்ஜியின் மனைவி சொல்லிவிட்டார். பிரேம்ஜிக்கு கல்யாணம் ஆனதிலிருந்து இணையவாசிகள் அவரை வச்சு செய்து கொண்டிருக்கிறார்கள். போதாத குறைக்கு இப்போது இந்து இன்னும் நல்லா செய்யுங்க என்று சொல்லி இந்த பதிவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

இந்துவின் இன்ஸ்டாகிராம் பக்கம் பிரைவசியில் இருப்பதால் பெரும்பாலும் இதை பலரும் அதிகமாக கவனத்திற்கு மாட்டார்கள். ஆனால் அவருடைய பக்கத்தை ஃபாலோ பண்ணும் ஒரு சில ரசிகர்கள் தங்களுடைய சேட்டையை சமூக வலைத்தளத்தில் காட்டி விட்டார்கள்.

Next Story

- Advertisement -