இயக்குனராக பயங்கர ஹிட் கொடுக்க ஆசைப்பட்ட பிரேம்ஜி.. காலை வாரிவிட்டு ரத்த சொந்தம்

பிரேம்ஜி புன்னகைப்பூவே படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான பிரேம்ஜி பின்பு வல்லவன் படத்தில் சிம்புவிற்கு நண்பனாக நடித்து ரசிகர்களின் பிரபலமானார்.

பிரேம்ஜி பிரபல இசை குடும்பத்தின் வாரிசு அதாவது இளையராஜாவின் தம்பியான கங்கை அமரனின் மகன்தான் பிரேம்ஜி அதனால் இயற்கையாகவே பிரேம்ஜிக்கு பாடல் பாடுவது இசையமைப்பது சரளமாக வர ஆரம்பித்தது. அதன் பிறகுதான் பிரேம்ஜி யுவன் சங்கர் ராஜா இசையில் பல படங்களில் பாடியுள்ளார்.

Also read: பிரேம்ஜியிடம் மன்றாட மன்னிப்பு கேட்ட சிவகார்த்திகேயன்.. இதைச் செய்யும்போது கொஞ்சம் பார்த்து செய்யலாம்ல்ல

பிரேம்ஜிக்கு நீண்ட நாள் ஆசை ஒன்று இருந்துள்ளது. அதாவது தனது அண்ணனான வெங்கட்பிரபு வைத்து கதாநாயகனாக ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். மேலும் அதற்காக பலமுறை முயற்சிகளும் செய்துள்ளார். பின்பு வான்டட் என்ற திரைப்படத்தை வெங்கட் பிரபுவை கதாநாயகனாக வைத்து துவங்குவதாக இருந்தது.

ஆனால் அந்த படம் எதிர்பாராத விதமாக கைவிடப்பட்டது. அதன்பிறகு பிரேம்ஜி படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை மேலும் வெங்கட்பிரபு ஏப்ரல் மாதத்தில், ஜி, சிவகாசி போன்ற படங்களில் நடித்த பொழுதுதான் பிரேம்ஜிக்கும் தனது அண்ணனை வைத்து ஒரு பயங்கரமான ஹிட் படத்தை கொடுக்க வேண்டுமென ஆசை வந்துள்ளது என வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இப்போதைக்கு ஹீரோவாக நடிக்க விருப்பம் இல்லை என்று ஓப்பனாக தெரிவித்து விட்டாராம் வெங்கட்பிரபு. இதனால் மனம் உடைந்து தனது ரூட்டை மாற்றி விட்டாராம்.

Also read: அஜித்தால் தப்பிய வெங்கட்பிரபு.. இல்லனா மொத்தமா போயிருக்கும்

ஆனால் தற்போது வரை தனது அண்ணனான வெங்கட்பிரபுவின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிரேம்ஜி சமீபத்தில் கூட பார்ட்டி படத்திற்கு இசையமைத்துள்ளார் தற்போது பிரேம்ஜி முழுநேர இசையமைப்பாளராக படங்களில் பணியாற்றி திட்டமிட்டுள்ளார்.

அதனால் தற்போது பிரேம்ஜிக்கு சில படங்களில் இசை அமைப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அதனால் சிறிது காலம் நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டு முழுநேர இசையமைப்பாளராக படங்களில் பணியாற்ற திட்டமிட்டுள்ளார்.

Also read: சிவகுமார் குடும்பத்தையே வச்சு செய்த வெங்கட்பிரபு.. ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி

Next Story

- Advertisement -