அஜித்தால் தப்பிய வெங்கட்பிரபு.. இல்லனா மொத்தமா போயிருக்கும்

அஜித் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வாலி, வில்லன், வரலாறு போன்ற படங்களில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இரட்டை வேடங்களில் நடித்தால் மக்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் அஜித் முழுமையாக வில்லனாக நடித்த படம்தான் மங்காத்தா.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மங்காத்தா படத்தில் அஜீத், அர்ஜுன், பிரேம்ஜி, வைபவ், திரிஷா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, அஞ்சலி என பல பிரபலங்கள் நடித்து இருந்தனர். அஜித்தின் திரை பாதையிலேயே மங்காத்தா படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித்துக்கு பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் வெங்கட் பிரபு படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை ஏற்பாடு செய்துள்ளதாக அண்மையில் கூறியிருந்தார். மேலும் அதில் அஜித், விஜய் என இரு நடிகர்களையும் வைத்து எடுக்க திட்டமிட்டு இருப்பதாக கூறினார்.

இந்நிலையில் அஜீத்துக்கு மங்காத்தா படம் 50வது படம். முதலில் வெங்கட் பிரபு அஜித்திடம் கதை சொல்லி ஓகே வாங்கியுள்ளார். ஆனால் அதன்பிறகு அஜித்தின் 50வது படத்தில் முழுக்க முழுக்க வில்லனாக காட்டினால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என யோசித்து கிளைமாக்ஸ் காட்சிகளில் மட்டும் அஜீத்தை நல்லவராக காட்டலாம் என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு அஜித், என்னிடம் சொன்னதை மட்டும் செய். வில்லனாக நடித்தால் மட்டுமே எந்த எல்லைக்கும் நடிக்க முடியும். நான் என்ன அரசியலுக்கு போகப் போகிறேனா, என்னை நல்லவராக காட்டுகிறாய். அந்த வினாயக் மகாதேவ் கதாபாத்திரம் வில்லனாகவே இருக்கட்டும் என வெங்கட் பிரபுவிடம் அஜீத் கூறியுள்ளார்.

அதன்பிறகுதான் வெங்கட் பிரபு படம் முழுக்க அஜித்தை வில்லனாகவே காட்டியிருந்தார். ஒருவேளை வெங்கட்பிரபுவின் யோசனையால் கடைசியில் அஜீத் நல்லவராக நடித்திருந்தால் படம் இந்த அளவுக்கு வெற்றி பெற்றுஇருக்குமா என்பது சந்தேகம்தான். மேலும் தற்போது எச் வினோத் இயக்கும் ஏகே 61 படத்திலும் அஜித் வில்லனாக நடிக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்