ஏ ஐ மூலம் நடக்க போகும் பாசப் போராட்டம்..விஜயகாந்த் போல் கௌரவிக்கப்படும் செலிபிரிட்டி

GOAT AI: வெங்கட் பிரபு, விஜய் வைத்து இயக்கம் கோட் படம் சூட்டிங் 90 சதவீதம் முடிந்து விட்டது. இந்த படம் செப்டம்பர் 5 திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்தில் மறைந்த விஜயகாந்தை ஏ ஐ டெக்னாலஜி மூலம் மீண்டும் திரையில் காமிக்கவிருக்கிறார்கள். அதற்குண்டான பழைய ஒரிஜினல் ஃபுட்டேஜ் களையெல்லாம் சேகரித்து சம்பவம் செய்திருக்கிறார்கள்.

கோட் படத்தின் இரண்டாவது சிங்கிள் வருகிற 22ஆம் தேதி விஜய் பிறந்தநாள் அன்று வெளிவர இருக்கிறது. படத்தில் விசில் போடு பாடலை போல மற்றும் ஒரு பாடல் விஜய் பாடி இருக்கிறார். அந்த பாடல் தான் வெளிவர போவதாக ஒரு தகவல் போய்க்கொண்டிருக்கிறது. இல்லையென்றால் விஜயகாந்த் வரும் காட்சிகளை வெளியிடுகிறார்களா என தெரியவில்லை.

இப்பொழுது விஜயகாந்த் போல மற்றும் ஒரு செலிபிரிட்டி குரல் இந்த படத்தில் வரவேற்கிறது. அவர் தோன்றாவிட்டாலும் அவரின் குரல் ஏ ஐ டெக்னாலஜி மூலம் பாடலாக வெளிவர இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் ஒரு பாச போராட்டம் தான். இதை முன் நின்று வழி நடத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் யுவன்.

ஏ ஐ மூலம் நடக்க போகும் பாசப் போராட்டம்

இளையராஜாவின் மகள் பவதாரணி. இவர் சமீபத்தில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு ட்ரீட்மென்ட் போன இடத்தில் இலங்கையில் மரணமடைந்துவிட்டார். அவர் மருத்துவமனையில் இருக்கும்போது அவரை ஊக்குவிக்கும் விதமாக அண்ணன் யுவன் சங்கர் ராஜா “சீக்கிரம் குணமாகி வா” உனக்காக ஒரு பாடல் கோட் படத்தில் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

ஆனால் பவதாரணி மருத்துவமனையிலேயே இறந்து விட்டார். இப்பொழுது யுவன் நாம் தங்கைக்கு வாக்கு கொடுத்து விட்டோம் அவரை எப்படியாவது கோட் படத்தில் பாட வைக்க வேண்டும் என்று அவருடைய குரலை ஏஐ டெக்னாலஜியில் கொண்டு வந்து ஒரு மெலடி பாடலை உருவாக்கி இருக்கிறார் இவனின் தங்கை பாசத்தை கண்டு மொத்த யூனிட்டும் மிரண்டு போயிருக்கிறது.

Next Story

- Advertisement -