சசிகலாவை மிஞ்சிய பிரேமலதா, உங்க ஆட்டத்திற்கு கேப்டனை ஏன் கஷ்டப்படுத்துறீங்க! வலுக்கும் கண்டனங்கள்

Premalatha Vijayakanth: ஒரு காலத்தில் கேப்டன் விஜயகாந்த் படங்களை பார்ப்பதற்காக தியேட்டரில் கூடிய கூட்டங்கள் கோடிக்கணக்கில் இருந்தன. அவருடைய முகத்தை பார்ப்பதற்காகவே தொண்டர்கள் தவமாய் தவம் கிடந்தார்கள். இப்போது தயவு செய்து கேப்டனை எங்களிடம் காட்டாதீர்கள் என கதறி கெஞ்சிக் கொண்டு இருக்கும் அளவுக்கு விஜயகாந்தின் நிலைமை இருக்கிறது.

சிங்கம் போல் கர்ஜித்த ஒரு மனிதனை, அசைவுகள் அற்று நிலை குலைந்து போய் வீல் சேரில் உட்கார்ந்து இருப்பதை பார்ப்பதற்கு கண்கள் குளமாகின்றன. ஆனால் எரிகிற வீட்டில் பிடுங்குனது மிச்சம் என அவரை சுற்றி இருப்பவர்கள் செய்யும் விஷயங்கள் ரசிகர்களை கொந்தளிக்க செய்கிறது. யார் எப்படி இருந்தாலும் பரவாயில்லை, தாலி கட்டிய மனைவியே இப்படி நடந்து கொள்வதா என பிரேமலதா விஜயகாந்த்திற்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.

Also Read:காலம் சில நேரங்களில் கொடுமையானது, விஜயகாந்த் பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்.. தேமுதிகவின் அடுத்த பொதுச் செயலாளர்

சமீபத்தில் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, தீவிர சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். உடனடியாக அவருடைய கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து விரைவில் கட்சி பொதுக்கூட்டம் கூடும் என சொல்லியிருந்தார்கள். இன்று தேமுதிக கட்சியின் கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு, விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டார்.

அரசியல் ஆசையால் பிரேமலதா செய்த விஷயம்

கணவன் கொண்டு வந்த கட்சியை மனைவி காப்பாற்ற நினைப்பதில் எந்த தவறும் இல்லை. பிரேமலதா விஜயகாந்த் பொதுச்செயலாளர் ஆக பதவி ஏற்பதற்கு விஜயகாந்த் சம்மதித்து விட்டார் என்று ஒரு கையெழுத்தை காட்டினால் கூட அவருடைய ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அந்த அளவிற்கு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மீதும் அவர்களுக்கு நல்ல நம்பிக்கை இருந்தது. இப்படி இருக்கும் பட்சத்தில் இன்று விஜயகாந்தை மேடையில் ஏற்றி மிகப்பெரிய தவறு செய்து இருக்கிறார்கள்.

சக்கர நாற்காலியில் உட்கார்ந்து இருப்பவர் விஜயகாந்த் தானா என அவருடைய தொண்டர்கள் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்கிறார்கள். சிங்கம் போல் நடந்து வந்த மனிதன் அந்த நாற்காலியில் தடுமாறுவதும், அவரை நான்கு பேர் சரி செய்து உட்கார வைப்பதும் பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. அதிலும் அவரை பொம்மை போல் இயக்கி பிரேம லதாவின் கைகளைப் பிடித்து தூக்க வைப்பதெல்லாம் ரொம்பவும் அவலம்.

அவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் இந்த கட்சி இருக்க வேண்டும். கூட்டணியில் பேரம் பேசி எப்படியும் சம்பாதித்து விடுவார்கள். இதற்காகத்தான் இப்படி ஒரு விஷயம் நடக்கிறது. இந்த விழாவில் விஜயகாந்தின் மகன்கள் இருவரும் கலந்து கொள்ளாமல் இருப்பது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலைமையில் நம் கணவரை இப்படி காட்ட வேண்டுமா என பிரேமலதா யோசிக்காமல் செய்த இந்த விஷயம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு சசிகலா செய்ததை விட மோசமாக தெரிகிறது என கண்டனங்களை எழுப்பி வருகிறார்கள்.

Also Read:மருத்துவமனையில் இருந்து வெளியான ஷாக்கிங் புகைப்படம்.. அடையாளமே தெரியாமல் மாறிப்போன கேப்டன்

- Advertisement -spot_img

Trending News