மருத்துவமனையில் இருந்து வெளியான ஷாக்கிங் புகைப்படம்.. அடையாளமே தெரியாமல் மாறிப்போன கேப்டன்

Viral Photo Of Vijayakanth: கடந்த ஒரு வார காலமாகவே விஜயகாந்தின் உடல்நிலை பற்றிய பேச்சு தான் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே உடல்நல குறைவின் காரணமாக அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார்.

இருந்தாலும் அவ்வப்போது சில முக்கிய நாட்களில் அவருடைய போட்டோ, வீடியோ உள்ளிட்டவை வெளியாகி கொண்டு தான் இருந்தது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு அவர் வழக்கமான சிகிச்சைக்காக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Also read: 80, 90களில் கமலுக்கு டஃப் கொடுத்த விஜயகாந்த்.. ஒரே நாளில் விடாமல் 22 தடவை மோதிய கேப்டன்

அதைத்தொடர்ந்து கேப்டன் உடல்நிலை சீராக இல்லாததால் இன்னும் 14 நாட்கள் சிகிச்சை தரவேண்டும் என மருத்துவமனை சார்பில் இருந்து அறிக்கை வெளியானது. அதிலிருந்து ஆளாளுக்கு கேப்டன் உடல்நிலை கவலைக்கிடம் என வதந்திகளை பரப்பி வந்தனர்.

இது பரபரப்பை கிளப்பிய நிலையில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டு அத்தனை வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதில் பேசிய அவர் கேப்டன் இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்பி விடுவார்.

Also read: வளர்த்த கடா உயர்வது பொறுக்காத விஜயகாந்த்.. இன்றுவரை கேப்டன் மேல் உள்ள ஒரே கரும்புள்ளி

அவர் நலமுடன் தான் இருக்கிறார். தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அதை தொடர்ந்து விஜயகாந்த் மனைவி, மகனுடன் மருத்துவமனையில் இருக்கும் போட்டோவும் வெளியாகி இருக்கிறது.

விஜயகாந்த் மனைவி, மகனுடன் இருக்கும் போட்டோ

vijayakanth
vijayakanth

அதில் கேப்டன் மாஸ்க் அணிந்தபடி இருக்கிறார். உடல் நலக்குறைவால் கொஞ்சம் மெலிந்த தோற்றத்துடன் இருக்கும் அவரை பார்த்த ரசிகர்கள் எப்படி இருந்த மனுஷன் இப்படி இருக்காரு. அவர் விரைவில் குணமாக வேண்டும் என ஆறுதல் கூறி வருகின்றனர்.

அடையாளமே தெரியாமல் மாறிப்போன கேப்டன்

vijayakanth-captain
vijayakanth-captain