பிரதீப் ரங்க நாதனுக்கு ஆப்பு அடிக்கும் பிரசாந்த் நீல்.. பரபரப்பை கிளப்பி ஏஜிஎஸ் க்கு வந்த நோட்டீஸ் தெரியுமா?

Prashant Neel and Pradeep: குறும்படங்கள் மூலம் இளம் தலைமுறையை கவர்ந்து கோமாளி படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர்தான் பிரதீப் ரங்கநாதன். 

கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து, லவ் டுடே படத்தின் மூலம் இயக்குனராக மட்டுமின்றி நாயகனாகவும் தடம் பதித்தார் பிரதீப். குறைந்த செலவில் எடுக்கப்பட்டு நிறைந்த லாபத்தை சம்பாதித்தது லவ் டுடே. மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து இன்றைய இளைஞர்களை கொண்டாட வைத்து வரும் பிரதீப், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதன்பின், மீண்டும் லவ் டுடே திரைப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துடன் கைகோர்க்கும் பிரதீப், “ஓ மை கடவுளே” படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். 

பிரதிப்புடன் மிஸ்கின், கே எஸ் ரவிக்குமார் என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைய உள்ள இத்திரைப்படத்தின் தலைப்பு டிராகன் என பெயரிடப்பட்டு போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடையேபெரும் வரவேற்பை பெற்று உள்ளது. சென்டிமென்ட்டாக லவ் டுடே படத்தை போன்று நவம்பர் மாதம் ரிலீஸ் செய்யும் நோக்கில்  இதன் படப்பிடிப்பு விறுவிறுவென நடைபெற்று வருகிறது.   

டிராகன் என பெயரிடப்பட உள்ள கன்னட திரைப்படம் 

பிரதீப் மற்றும் ஏஜிஎஸ் க்கு வந்த சோதனையாக இதே தலைப்புடன் கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணையும் திரைப்படத்திற்கு டிராகன் என பெயரிட போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் வெளியாக உள்ள இதன் தலைப்பால் இரு திரையுலகத்தினருக்கும் இடையே பெரும் சர்ச்சை வெடித்து வருகிறது. இதை கேள்விப்பட்ட பிரசாந்த் நீல் டைட்டிலை கொடுக்கும்படி வற்புறுத்துகிறாராம். மேலும் NOC சான்றிதழும் வேண்டும் என்று கேட்கிறாராம். 

மேலும் பரபரப்பை கிளப்பிய ஏ ஜி எஸ்க்கு இது தொடர்பாக நோட்டீஸ் ஒன்றும் வந்து உள்ளது. ஏற்கனவே டிராகன் படம் டைட்டிலை அறிவித்து, முதல் கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், இப்பொழுது வந்துள்ள இந்த சர்ச்சை ஏ ஜி எஸ்க்கு பெரும் தலைவலியாய் மாறி உள்ளது.

ரெண்டே படத்தில் கொடிகட்டி பறக்கும் பிரதீப்

- Advertisement -