பெரிய இடத்து சகவாசத்தால் மொத்தமாய் அடங்கிப்போன பிரதீப்.. இயக்குனரை லாக் செய்த மாமா குட்டி

Pradeep Ranganathan: சினிமாவில் திறமை இருந்தால் மட்டுமே போதும். அழகும் தோற்றமும் ஒரு பெரிய விஷயமே இல்லை. இதற்கு உதாரணமாக எத்தனையோ நடிகர்கள் நடிகைகளை சொல்லலாம். அந்த வகையில் நடிகர் மற்றும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் பெயரும் இடம்பெறும்.

ஆரம்பத்தில் இயக்குனராக கோமாளி படத்தின் மூலம் அறிமுகமானவர். பின்பு லவ் டுடே படத்தை இயக்கி நடித்து ரசிகர்களை கவர்ந்து தற்போது தவிர்க்க முடியாத இளம் ஹீரோவாக ஜெயித்து வருகிறார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடியும் தருவாயில் இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக பிரதீப் அவருடைய அடுத்த படத்தையும் நோக்கி பயணித்து வருகிறார். அந்த வகையில் சுதா கொங்கரா அசிஸ்டன்ட் கீர்த்தி ஈஸ்வரன் இயக்கப் போகும் படத்தில் கமிட் ஆகியிருக்கிறார்.

இவர்கள் காம்போவில் உருவாகும் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கப் போகிறது. இவர்கள் கோலிவுட்டில் கிட்டத்தட்ட பத்து படங்களையாவது தயாரித்து பல கோடிகளை சம்பாதித்து விட வேண்டும் என்ற தீர்மானத்துடன் 5000 கோடியை இறக்க தயாராக இருக்கிறது.

தந்திரமாக செயல்பட்ட பிரதீப்

இதை தெரிந்து கொண்ட கீர்த்தி ஈஸ்வரன் உடனே மைத்திரி மூவி மேக்கர்ஸ் இடம் ஒன் லைன் ஸ்டோரியை சொல்லி சம்மதத்தை வாங்கி விட்டார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்த வேலைகள் நடக்கும் முயற்சியில் இவருக்கு ஒரு ஆபீசை போட்டுக் கொடுத்து விட்டார்கள்.

அந்த ஆபீஸை பார்த்தால் இதுவரை யாரும் இப்படி ஒரு பிரம்மாண்டமான ஆபீசை போட்டுக் கொடுத்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அசத்தி இருக்கிறார். இனி ஒவ்வொரு வேலைகளும் படபடவென்று ஆரம்பமாகப் போகிறது.

இயக்குனராக நுழைந்த பிரதீப் தற்போது ஹீரோவாக ஜொலித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் பிடிச்சாலும் பிடிச்சா புளிய கொம்பாக தான் பார்த்து பிடித்து இருக்கிறார்.

பிரதீப் தற்போது பெரிய இடத்துடன் சகவாசத்தை வைத்ததால் இப்படத்திற்கு 10 கோடி சம்பளத்தை கேட்டு லாக் செய்து விட்டார். இதை தான் சொல்வார்கள் கொடுக்கற தெய்வம் குறைய பிச்சிட்டு கொடுக்கும் என்று. அது பிரதீப் விஷயத்தில் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்