பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவனுக்கு கொடுக்கும் தொந்தரவு.. மதிப்ப காப்பாத்தணும்னு உத்தமன் வைக்கும் செக்

The rift between Pradeep Ranganathan and Vignesh Sivan: தமிழ் சினிமாவில் இன்றைய இளைஞர்களின் நாடித்துடிப்பை அறிந்து செயல்படும் இளம் இயக்குனர் யாரென்றால் அது பிரதீப் ரங்கநாதன் ஆகத்தான் இருக்க முடியும். குறும்படங்களின் மூலம் திரை துறையில் தனக்கென ஒரு வாய்ப்பை  உருவாக்கி கொண்டவர் பிரதீப்.

ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  இயக்குனராக அறிமுகமானார். கோமாளி படத்தில் இயக்குனராக வெற்றி பெற்ற போது, அடுத்து நடிகனாக இதே போல் விருது வாங்குவேன் என்று சொல்லி அடித்தார் இந்த உத்தமன். 

கடந்த 2022 லவ் டுடே மூலம் நடிகராக தடம் பதித்த பிரதீப் மாபெரும் வெற்றி பெற்று,  இரண்டே படங்களின் மூலம் மோஸ்ட் வான்டெட் இயக்குனராகவும் நடிகராகவும் மாறினார்.

இன்றைய இளம் தலைமுறைகளுக்கு உள்ள கெட்ட பழக்கம் என்னவென்றால் தரமான வெற்றியை பதிவு செய்தவுடன் கடகடவென மார்க்கெட்டை உயர்த்தி அனுபவசாலிகளுக்கு டப் கொடுப்பதுதான்.  இந்த செயலையும் சிறந்த முறையில் அரங்கேற்றினார் பிரதீப். 

கமலின் தயாரிப்பில் பிரதீப்  நடிக்க உள்ளதாக இருந்தது. இவரின் சம்பளத்தை கேட்டு அதிர்ந்து போய் பெரிய கும்பிடு போட்டார் கமல். அடுத்ததாக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவனுடன் அடுத்த படத்தில் கைகோர்த்தார் பிரதீப். 

எல்ஐசி என பெயரிடப்பட்டு பல மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்ட இத்திரைப்படத்தில் பிரதீப் உடன் கீர்த்தி செட்டி, நயன்தாரா, சீமான், எஸ் ஜே சூர்யா போன்ற முன்னணி நட்சத்திரங்கள்  நடித்து வருகின்றனர். 

இயற்கை மற்றும் செயற்கை விவசாயத்திற்கு இடையே ஆன முரண்பாட்டை கூறும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 70% முடிந்தது. படப்பிடிப்பின் போது பிரதீப் ரங்கநாதன் இயக்குனரிடம் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

படப்பிடிப்பில் விக்கியை டார்ச்சர் பண்ணும் பிரதீப்

“எனக்கு ஒரு இமேஜ் இருக்கு, மக்கள் என்னை நம்பி இருக்கிறார்கள், நீங்கள் சொல்கிறபடி செய்ய முடியாது” என விக்னேஷ் சிவனுக்கு கடும் நெருக்கடி கொடுக்கிறாராம். 

“அது சரியில்லை! இது சரியில்லன்னு! ஓவர் டார்ச்சர்  வேற” பண்ணுகிறாராம்.  பிரதீப் இயக்குனராக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கும் படங்கள் அதிக லாபத்தை தருவதால் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் இவருக்கு அதிக தொகையை கொடுத்து டைரக்ட் செய்ய கூப்பிட்டு இருந்தனராம். 

ஹீரோவா சில படங்கள் நடித்துவிட்டு, இயக்குவேன் என்ற சொல்லியிருந்த சமயத்தில், விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப்புக்கு ஏற்பட்ட இத்தகைய முரண்பாட்டால் இனி, இவர் அடுத்தவர் டைரக்ஷனில் நடிப்பது என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்