Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி நாளுக்காக எப்போதுமே ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். ஆனால் கடந்த வாரம் நடந்த பிரதீப் விவகாரம் இந்த வாரம் கடுமையாக சோசியல் மீடியாவில் எதிரொலித்தது. அதைத்தொடர்ந்து ஆண்டவரின் பதில் என்னவாக இருக்கும் என்பது தான் இப்போது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அது மட்டுமின்றி மாயா கேங்கில் இருந்து பூர்ணிமா வெளியேற்றப்பட வேண்டும் என்ற ஆர்வமும் ஒரு பக்கம் உள்ளது. அதனாலயே சனிக்கிழமை எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த சூழலில் பிரதீப் மீது தவறு இல்லை என பல வீடியோ ஆதாரங்கள் ட்விட்டர் தளத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது.
அதைத்தொடர்ந்து அவர் மீண்டும் வீட்டுக்குள் வர இருக்கிறார் என்ற தகவலும் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. இப்படி பெரும் அக்கப்போர் நடந்து வரும் நிலையில் பிரதி கடந்த சில நாட்களாக ட்விட்டர் தளத்தில் பதிவிடும் கருத்துக்கள் வைரலாகி வருகிறது. அதில் தற்போது அவர் போட்டிருக்கும் ஒரு பதிவு அதிவேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
Also read: ஆண்டவருக்கு எதிராக இணைந்த முந்தின சீசன் போட்டியாளர்கள்.. பிக்பாஸுக்கே தண்ணி காட்டிய பிரதீப்
அதில் அவர் ஒரு வேளை என்னை மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்ப நினைத்தால் எனக்கு இரண்டு ரெட் கார்டு வேண்டும் என அவர் கேட்டுள்ளார். ஏனென்றால் எனக்கு எதிராக சதி செய்த இரண்டு போட்டியாளர்களுக்கு அதை நான் கொடுக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் வரும் வாரத்தில் நான் கேப்டனாக இருக்க வேண்டும் என மாஸ் காட்டியுள்ளார்.
இதை பார்க்கும் போதே பிக் பாஸ் டீமிலிருந்து இவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவது தெளிவாக தெரிகிறது. அந்த வகையில் விஜய் டிவி மற்றும் கமலுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்ததில் சேனல் தரப்பு கொஞ்சம் தடுமாறித்தான் போயிருக்கிறது. அதனால் இந்த வாரம் முழுக்க மாயா மற்றும் அவருடைய கூட்டாளிகளின் முகத்திரையை கிழிக்கும் பணியில் பிக்பாஸ் ஈடுபட்டு வருகிறார்.
Also read: தீர விசாரிப்பதே மெய்.. சோலியை முடிக்க வரும் பிரதீப், பின்வாங்கும் ஆண்டவர்
இதனால் பயந்து போன அந்த கொடுமைக்கார கூட்டம் இப்போது கமல் மீது மொத்த பழியையும் சுமத்தி வருகிறது. நாங்க ரெட் கார்டு விஷயத்தை ஆரம்பிக்கல கமல் சார் தான் சொன்னார் என்று வண்டியை திருப்பி விட்ட கதையையும் நாம் பார்த்தோம். இப்படி அந்தர் பல்டி அடித்த கூட்டத்திற்கு பிரதீப்பின் வருகை நிச்சயம் மரண பயத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.