வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

ஆண்டவருக்கு எதிராக இணைந்த முந்தின சீசன் போட்டியாளர்கள்.. பிக்பாஸுக்கே தண்ணி காட்டிய பிரதீப்

Biggboss 7: விஜய் டிவி பற்ற வைத்த நெருப்பு இப்போது ட்விட்டர் தளம் முழுக்க பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. பலரின் ஆதரவை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இப்போது கடும் எதிர்ப்பலைகள் கிளம்பி கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பிரதீப் விவகாரம் தான் என்பதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

அந்த அளவுக்கு அவர் இப்போது சோசியல் மீடியாவின் நாயகனாக விஸ்வரூபம் எடுத்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களின் வன்மத்தின் காரணமாக வெளியேற்றப்பட்ட இவருக்கு தற்போது எல்லா பக்கத்தில் இருந்தும் ஆதரவுகள் குவிந்து கொண்டிருக்கிறது.

அதில் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர்கள் கமலுக்கு எதிராக ஒன்று கூடி இருப்பது சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் பாடகி சுசித்ரா, மாயா கமலுக்கு பல வருட பழக்கம் என்ற ஒரு உண்மையை வெளிப்படுத்தி இருக்கிறார். அதனாலயே அவருக்கு ஆண்டவரின் சப்போர்ட் அதிகமாக இருக்கிறது. இதை சமீபத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய யுகேந்திரனும் உறுதிப்படுத்தி இருந்தார்.

Also read: பிக்பாஸ் வீட்ல நைட்டும் தூங்க விடல, பகல்லயும் தூங்க விடல.. பெட்ல புரட்டி எடுக்கும் மன்மத குஞ்சு

அதேபோன்று தாமரை, பிரியங்கா, அமீர், பாவனி ரெட்டி ஆகியோரும் இந்த ரெட் கார்ட் விவகாரம் நிச்சயம் சரியான தீர்ப்பு கிடையாது என்று கூறியிருந்தனர். அதில் தாமரை ஒரு படி மேலே போய் வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது சுத்த பொய் என கூறியிருக்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்.

அதாவது பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு கண்ணாடிக்கு பின்னாலும் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறதாம். அப்படி பார்த்தால் கண்ணுக்கு தெரிந்து 60 கேமராக்கள் என்றால் கண்ணுக்கு தெரியாமல் பல கேமராக்கள் இருக்கிறது. அது மட்டும் இன்றி ஒரு ஆளை கவனிப்பதற்காகவே ஒரு டீம் செயல்படுகிறதாம்.

சிறு பிரச்சனை என்றால் கூட ஒட்டுமொத்த நபர்களும் அங்கு கூடி விடுவார்கள் என தாமரை தெரிவித்துள்ளார். அப்படி இருக்கும்போது பிரதீப்பால் பெண்களுக்கு என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது. இது கமலுக்கும் பிக்பாஸ் டீமுக்கும் நிச்சயம் தெரியும். அதனாலயே இப்போது முன்னாள் போட்டியாளர்கள் கொந்தளித்து போய் உள்ளனர். ஆக மொத்தம் பிரதீப் பிக்பாஸுக்கே தண்ணி காட்டி வருகிறார் என்பதுதான் உண்மை.

Also read: என்ன கேப்டனா, வேல செய்ய விடமாட்றாங்க, கதறும் மாயா.. நாரதர் வேலையை பார்த்த பிக்பாஸ்

- Advertisement -

Trending News