டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் பிரபல சேனல்.. புதிய சீரியல்களை தரையிறக்கியதால் திண்டாடும் விஜய் டிவி  

வெள்ளி திரைக்கு நிகராக சின்னத்திரைக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் சின்னத்திரை ரசிகர்கள் இந்த வாரம் எந்த சீரியலை ரசிகர்கள் விரும்பி பார்த்துள்ளார்கள் என்பதை இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் தெரிந்துவிடும். தற்பொழுது அதற்கான டிஆர்பி ரேட்டிங் வெளியாகி பட்டையை கிளப்பியுள்ளது. 

இதில் 10-வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலும், 9-வது இடத்தில் ஆனந்த ராகம் சீரியலும், 8-வது இடத்தில் பாரதி கண்ணம்மா சீரியலும், 7-வது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும் இடம் பிடித்துள்ளது. 

கண்ணான கண்ணே: இந்த சீரியலில் மீரா தனது அப்பாவின் உயிரை காப்பாற்றுவதற்காக குடும்பத்திற்கே தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர். ஒரு பக்கம் மேனகா எப்படியாவது கௌதம் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பது போலவும் இக்கதைகளமானது அமைந்துள்ளது. இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் சீரியலைத் தொடர்ந்து  கண்ணான கண்ணே சீரியலும் 6-வது இடத்தில் உள்ளது.

Also Read: சன் டிவியை ஓரம் கட்டிவிட்டு சீரியலில் முதல் இடத்தைப் பிடித்த பிரபல தொலைக்காட்சி.! அதுவும் எந்த சீரியல் தெரியுமா

எதிர்நீச்சல்: இந்த சீரியலில் குணசேகரனின் நீண்ட நாள் திட்டத்தை எப்படியாவது பொங்கல் விழாவில் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் பட்டம்மாள் அப்பத்தாவை கொலை செய்வதற்காக விரித்த வலையில் ஜனனி மாட்டிக் கொண்டுள்ளார். குணசேகரனின் இந்த திட்டம் தவுடுபடியான நிலையில் அடுத்து எப்படி காய் நகர்த்தலாம் என்பது போல் கதையானது நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் சீரியல் ஆனது 6-வது இடத்தில் உள்ளது.

இனியா: இந்த சீரியலில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இனியாவிற்கும் யாழினிக்கும் ஒரே குடும்பத்தில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த திருமணம் நடக்கக்கூடாது என்ற எண்ணத்தில் விக்ரம்யின் அத்தை இனியாவிற்கு எதிராக சதி திட்டத்தை தீட்டியுள்ளார். இதில் இனியாவிற்கு உயிருக்கே ஆபத்து ஏற்பட்டது மட்டுமில்லாமல் திருமணமே நடக்காது என்பது போல் கதையானது சென்று கொண்டிருக்கிறது. இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் இனியா 4-வது இடத்தை பிடித்துள்ளது.

சுந்தரி: இந்த சீரியலில் வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களை சந்தித்த நிலையிலும் கலெக்டராக வேண்டும் என்ற லட்சியத்தில் குறிக்கோளாக உள்ளார். ஆனால் சுந்தரி தனது பார்வையை இழக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து எவ்வாறு தன்னை மீட்டு சுந்தரி கலெக்டராக போகிறார் என்பது போல் கதையானது நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் சுந்தரி சீரியல் ஆனது 3-வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: விஜய் டிவி குக் வித் கோமாளி பிரபலத்தை பணத்தை கொடுத்து மயக்கி ஜீ தமிழ்.. இவர் போவார்னு எதிர்பார்க்கல!

வானத்தைப்போல: இந்த சீரியலில் பொன்னி தனது நீண்ட நாள் காதலனான சரவணனை கைப்பிடிக்க இறங்கி உள்ள முயற்சியை கோமதி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். சரவணன் உடன் சென்றுள்ள பொன்னி, சின்ராசு மற்றும் துளசி கையில் சிக்குவாரா என்பதைப் போல் கதையானது நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் வானத்தைப்போல சீரியல் 2-வது  இடத்தில் உள்ளது.

கயல்: இந்த சீரியலில் கயலின் அம்மாவை மருத்துவமனையில் சேர்த்து உள்ளதால் அதற்கு தேவைப்படும் பணத்தினை ஏற்பாடு செய்வதற்கு குடும்பமே அலைந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் எவ்வாறு கயல் தனது அம்மாவை காப்பாற்ற போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் கயல் சீரியலானது முதல் இடத்தை பிடித்துள்ளது.

Also Read: மிக மட்டமான முன் உதாரணம்.. விஜய் டிவியை விளாசிய சீசன் 6 நடிகை

இவ்வாறு தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங் வரிசையில் டாப் 6 இடங்களிலும் விஜய் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளி சன் டிவி சீரியல் தான் முன்னிலை வகிக்கிறது. அதிலும் புதுவரவாக வந்த இனியா சீரியல் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டு டிஆர்பி ரேட்டிங்கில் முன்னேறி வெகு விரைவிலேயே 4-வது இடத்தை பிடித்து ஃபேவரிட் சீரியலாக மாறி உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்