எவ்ளோ கோடி கொடுத்தாலும் சாமியா நடிக்க மாட்டேன்.. சத்யராஜ் இவர் முன்னாடி நிக்க கூட முடியாது

Sathyaraj: சத்யராஜ் ஹீரோவாக இருந்ததை காட்டிலும் இப்போது பிஸியாக நடித்து வருகிறார். டாப் ஹீரோக்கள் அனைவரின் படங்களிலும் இவர் கட்டாயம் உண்டு.

அதில் சமீபத்தில் இவர் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க உள்ளதாக ஒரு செய்தி பரவியது. இது எல்லோருக்குமே அதிர்ச்சி தான்

ஏனென்றால் பெரியார் கொள்கையை பின்பற்றும் இவர் எப்படி இதில் நடிக்க முடியும் என்ற கேள்வி அனைவருக்கும் இருந்தது. அதை அடுத்து ஒரு பட விழாவில் சத்யராஜ் இதற்கு தகுந்த விளக்கம் அளித்து இருந்தார்.

என்னவென்றால் இப்படி ஒரு செய்தி பரவுவது உண்மை கிடையாது. ஒருவேளை இது தொடர்பாக என்னை அணுகினார்கள் என்றால் பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குனராக இருந்தால் சரிதான் என கூறியிருந்தார்.

பெரியார் கொள்கையை பின்பற்றும் சத்யராஜ்

பெரிய இயக்குனராக இருந்தால் உங்கள் கொள்கைகளை ஓரம் கட்டி விடுவீர்களா என இதற்கு சில கருத்துக்களும் கிளம்பியது. ஆனால் லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்தாலும் சாமியாகவோ சாமி படங்களிலோ நடிக்க மாட்டேன் என இலட்சியத்தோடு ஒரு நடிகர் இருந்திருக்கிறார்.

அவர்தான் லட்சிய நடிகர் என போற்றப்படும் எஸ் எஸ் ஆர். பெரியார் மீது பற்று கொண்ட இவர் புகழின் உச்சியில் இருந்தபோது தன்னை தேடி வந்த சாமி படங்களை எல்லாம் ஏற்காமல் மறுத்திருக்கிறார்.

இத்தனைக்கும் அந்த காலகட்டத்தில் இவருக்கு பல லட்சங்கள் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் இன்றைய தேதிக்கு அது பல கோடி பெறும்.

அப்படி இருந்தும் கூட கொண்ட கொள்கையிலிருந்து மாறாமல் இருந்த எஸ் எஸ் ஆர் கடைசிவரை அதை சாதித்து காட்டினார். ஒரு வேளை அந்த சம்பளத்தை வாங்கிக் கொண்டு அவர் நடித்திருந்தால் சென்னையில் பாதி இடங்களை அவர் வாங்கி போட்டிருக்கலாம்.

சத்யராஜ் கூட இப்படி ஒன்றை பின்பற்றி வந்தாலும் மோடியாக நடிக்க வாய்ப்பு வந்தால் ஏற்க மாட்டேன் என ஆணித்தரமாக கூறவில்லை. அந்த வகையில் லட்சிய நடிகர் எஸ் எஸ் ஆர் முன் இவர் நிற்கவே முடியாது.

சத்யராஜுக்கு குருவாக இருக்கும் நடிகர்

Next Story

- Advertisement -