மோடி பயோபிக்கில் நடிக்க சத்யராஜ் லிஸ்ட் போட்ட 5 இயக்குனர்கள்.. அதுல ஒருத்தர் செத்தே போயிட்டாங்க ஜி!

Sathyaraj: ஒவ்வொரு காலத்திற்கு ஏற்ப புதுப்புது ட்ரெண்டிங் உருவாகிக் கொண்டே வருகிறது. அந்த வகையில் பழைய படங்களை ரீமேக் பண்ணுவது, வெற்றி படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் எடுப்பது, வெற்றி பெற்ற படங்களை மறுபடியும் ரீலீஸ் செய்வது மற்றும் யாரையாவது பற்றி கதையை சொல்லும் விதமாக பயோபிக் கதையை உருவாக்குவது என்று சினிமா அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது.

அந்த வகையில் இளையராஜா பயோபிக் கதையில் தனுஷ் நடித்து வருகிறார். அதே மாதிரி மோடி ஜி பயோபிக் கதையில் நடிகர் சத்யராஜ் நடிப்பதற்கு ஆர்வம் இருப்பது போல் பேசி இருக்கிறார். அதாவது விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள “மழை பிடிக்காத மனிதன்” என்ற படத்தில் சத்யராஜ், சரத்குமார், மேகா, ஆகாஷ் போன்ற பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.

தன்னுடைய ஆசையை போட்டு உடைத்த சத்யராஜ்

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் மொத்த பட குழுவும் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசி இருக்கிறார்கள். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், சத்யராஜிடம் பிரதமர் மோடி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறீர்களா என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு சத்யராஜ் கார்ப்பரேட் கம்பெனிகள் எந்த ஒரு கம்பெனி ரகசியத்தையும் வெளியே சொல்ல கூடாது என்று ஒப்பந்தம் போட்டிருப்பதாக சொல்லி இருக்கிறார்.

அதனால் எது வேண்டுமானாலும் முதலில் அவர்கள் சொல்லிய பிறகு தான் நான் பதில் கூற முடியும் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் கூலி படத்தில் லோகேஷ் அறிவித்த தகவலின் படி நான் அதில் ரஜினியுடன் நடிக்க போறது உறுதி என்பதையும் பதிவிட்டு இருக்கிறார். இதனைத் தொடர்ந்து மோடி படத்தில் நடிக்க யாரும் என்னை கேட்கவில்லை.

அப்படியே நடித்தாலும் மணிவண்ணன் மாதிரி இயக்குனர்கள் இயக்கினால் தான் உள்ளதே உள்ளபடி எடுப்பார்கள் என்று சத்யராஜ் பாஷையில் நக்கலாக பதிலடி கொடுத்திருக்கிறார். அப்படி இல்லை என்றால்,

வெற்றிமாறன்
பா ரஞ்சித்
மாரி செல்வராஜ்
விஜய் மில்டன்

இவர்கள் இயக்கினால் நான் கண்டிப்பாக மோடி பயோபிக் கதையில் நடிக்க சம்மதம் தெரிவிப்பேன் என்பதையும் கூறி இருக்கிறார். அந்த வகையில் சத்யராஜ் மனதிற்குள் இப்படி ஒரு எண்ணம் இருப்பது உணர முடிகிறது. இதனால் கூடிய விரைவில் இந்த ஒரு சம்பவம் நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

தரமான சம்பவம் செய்த சத்யராஜ்

Next Story

- Advertisement -