எனக்கு ஒரு கண்ணு போனா அவனுக்கு ரெண்டு கண்ணும் போகணும்.. விஷ்ணுவை காரி துப்பிய பூர்ணிமா

Biggboss 7: எந்த பிக்பாஸ் சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த ஏழாவது சீசன் முழு வன்மமாக மட்டுமே இருக்கிறது. அதிலும் ஒத்த வில்லன் இருந்தால் கூட பரவாயில்லை. மொத்த கூட்டமும் வில்லனாக தான் இருக்கிறது. அதில் மாயா மாஃபியா செய்யும் அட்ராசிட்டி கொஞ்ச நஞ்சம் கிடையாது.

தற்போது டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று நடந்த போட்டியில் விஷ்ணு 3 மதிப்பெண்களை பெற்று வெற்றி பெற்றார். ஆனால் அதன் பின்னணியில் பல சம்பவங்கள் நடந்தது. போட்டியாளர்கள் மற்றவர்களை ஆட்டத்தை விட்டு வெளியேற்றி முயல் பொம்மைகளை கைப்பற்ற வேண்டும் என்பதுதான் விதிமுறை.

அதன்படி விஷ்ணு, மணி இருவரும் தீயாக வேலை பார்த்தனர். அதில் மணி, பூர்ணிமாவின் கற்களை அகற்றி முயல் பொம்மையை கைப்பற்றும் வேலையில் இறங்கினார். அதற்கு உதவுவது போல் விஷ்ணு செய்த ஒரு விஷயம் பூர்ணிமாவை பயங்கர காண்டாகி விட்டது.

Also read: பிக் பாஸில் அதிகமா நாமினேட் செய்யப்பட்ட 6 போட்டியாளர்கள்.. ஒரே ஆளை 8 முறை குத்தி கிழிச்ச ஹவுஸ் மேட்ஸ்

அதாவது பூர்ணிமா மணியின் கற்களை எடுத்துக் கொண்டிருந்த போது விஷ்ணு குறுக்கே புகுந்து அனைத்தையும் களைத்து விட்டார். இதனால் தோற்றுப் போன அவர் விஷ்ணுவை பார்த்து காரி துப்பி கொண்டே மணியிடம் அந்த முயல் பொம்மை தூக்கி போட்டார்.

அந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகிறது. கமல் அவ்வளவு சொல்லியும் தொடர்ந்து மாயா, பூர்ணிமா இருவரும் இப்படிப்பட்ட வேலைகளை தான் செய்து வருகின்றனர். ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு இருவரும் ஓரமாக உட்கார்ந்து மாட்டிப்போமோ என புலம்பியது வேறு கதை.

இப்படி நமக்கு ஒரு கண்ணு போனா மத்தவங்களுக்கு ரெண்டு கண்ணும் போகணும் என நினைக்கும் இவர்கள் இருவரும் நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டும். இதே போல் தெலுங்கு பிக்பாஸில் கூட ஒரு சம்பவம் நடந்தது. அதைப் பார்த்து நாகஜுனா வெளிப்படுத்திய கோபமே மிரட்டலாக இருந்தது. அதை இந்த வாரம் கமல் செய்வாரா என்பதை பார்ப்போம்.

Also read: சிதறிய பிக்பாஸ் ஓட்டு.. கடைசி இடத்துக்கு வந்த வில்லி, வெளியேறப் போவது யாரு.?

- Advertisement -spot_img

Trending News