ஐபிஎஸ் வீட்டிலேயே இருக்கும் பொறுக்கி.. போலீஸ் மூளையை கசக்கிய சந்தியா

விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் ஐபிஎஸ் கனவுடன் இருக்கும் சந்தியா அதற்கான பரீட்சையை எழுதி முடித்து தற்போது ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார். இந்நிலையில் சிவகாமியின் இளைய மருமகள் அர்ச்சனாவிற்கு வீட்டில் வளைகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறுகிறது.

இந்த விசேஷத்தில் ஆதியின் காதலி ஜெசியும் கலந்து கொள்கிறார். ஜெசியை வரவைப்பது அர்ச்சனா தான். வந்த இடத்தில் ஜெசி மயங்கி விழ, அதன்பிறகு அவர் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சிவகாமியின் மாமியார் கண்டுபிடிக்கிறார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருக்கும் ஜெசியை வீட்டை விட்டு வெளியேறுகிறார் சிவசாமி.

Also Read: என்னத்த படிச்சு கிழிக்கப் போற ஐபிஎஸ் சந்தியா

உடனே ஆத்திரமடைந்த ஜெசி தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா ஆதி தான் என அடித்துக் கூறுகிறார். ஆனால் ஆதி குடும்பத்தின் முன்னிலையில் தலைகுனிவை ஏற்படக்கூடாது என்பதற்காக ஜெசியின் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சத்தியம் செய்கிறார்.

இதன்பிறகு ஜெசியின் அம்மா, அப்பா இருவரும் அந்த இடத்திற்கு வருகிறார்கள். உண்மையை போலீசிடம் சென்றால் தான் கண்டுபிடிக்க முடியும் என ஜெசியின் அம்மா அப்பா இருவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளிக்கின்றனர்.

Also Read: சஞ்சீவ்-ஆலியாவை தொடர்ந்து ஜோடி சேரும் விஜய் டிவி பிரபலம்

அங்கிருந்து வந்த போலீஸ் ஆதியை கைது செய்த அழைத்துச் செல்கிறது. அதன் பிறகு சந்தியாவிற்கு ஆதியின் மீது சந்தேகம் இருப்பதால், ஆதி-ஜெசி இருவரும் தந்திருந்த ஹோட்டலில் இருக்கும் கேமராவின் மூலம் ஆதாரத்தை சேகரித்து, அதை சிவகாமியிடம் போட்டு காண்பிக்கிறார்.

அதை பார்த்து குடும்பமே ஷாக்காகி ஆதி எவ்வளவு பெரிய கேவலமான செயலை செய்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்கின்றனர். தனது மகன் தான் தவறு செய்திருக்கிறார் என்பதை உணர்ந்து சிவகாமி, ஜெசியின் அம்மா அப்பா இருவரிடமும் மன்னிப்புக் கேட்டதுடன், ஆதி -ஜெசி இருவருக்கும் திருமணம் செய்து வைக்கவும் முடிவெடுக்கின்றனர்.

Also Read: குளியலறை காட்சியில் சீரியலா.? முகம் சுளிக்க வைக்கும் விஜய் டிவி

- Advertisement -