சன் டிவி டிஆர்பியை உடைக்க பலே திட்டம்.. புத்தம்புது 4 சீரியல்களை இறக்கிய விஜய் டிவி

ஒரு காலத்தில் சீரியல் என்றாலே அது சன் டிவி தான் என்ற நிலைமை இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்தை விஜய் டிவி பிடிக்க ஆரம்பித்தது. ஒருவழியாக முதல் ஐந்து இடத்தையுமே விஜய் டிவி பிடிக்க ஆரம்பித்தது. இதனால் சன் டிவி கயல், சுந்தரி, எதிர்நீச்சல் போன்ற தொடர்களை இறக்கி டிஆர்பி தக்க வைத்துக் கொண்டது.

இப்போது சன் டிவியில் டிஆர்பியை உடைப்பதற்காக நான்கு முத்தம் புது சீரியல்களை விஜய் டிவி இறக்க உள்ளது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடர் கிளைமாக்ஸ் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது தவிர இன்னும் மூன்று தொடர்களும் விஜய் டிவியில் முடிய உள்ளது.

Also Read : விஜய்க்கு சம்பளம் 100 கோடி.. அவரை தூக்கி விட்ட இயக்குனரோ தெருக்கோடி

அந்த வகையில் பொன்னி என்ற புத்தம் புதிய தொடர் வர இருக்கிறது. இதில் வேலைக்காரன் தொடரில் கதாநாயகனாக நடித்த வேலன் மற்றும் ராஜா ராணி தொடரில் சரவணனின் தங்கையாக நடித்த பார்வதி ஆகியோர் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளனர். இது இரவு நேர தொடராக ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஆஹா கல்யாணம் என்ற தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்தத் தொடரை பிரான்ஸ் இயக்க டெலி ஃபேக்டரி தயாரிக்கிறது. மேலும் சன் டிவியில் பல வெற்றி தொடர்களை கொடுத்தவர் இயக்குனர் குமரன். இப்போது விகடன் நிறுவனத்திற்காக சிறகடிக்க ஆசை என்ற தொடரை இயக்கவிருக்கிறார்.

Also Read : 4 வருடங்களாக ஒளிபரப்பாகும் சீரியலை ஊத்தி மூடும் சன் டிவி.. 1200 எபிசோடை தாண்டிய ஃபேவரட் நாடகம்

இதில் வேலைக்காரன் தொடர் கதாநாயகி வள்ளி நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக புது முக நடிகர் களமிறங்குகிறார். இதைத்தொடர்ந்து நான்காவதாக விக்ரம் வேதா என்ற தொடரை வீனஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதில் உள்ள நடிகர் நடிகைகளை பற்றி விரைவில் தகவல் வெளியாகும்.

இவ்வாறு விஜய் டிவி தடாளடியாக நான்கு புதிய தொடர்களை இறக்குவதால் சன் டிவியின் டிஆர்பி குறைய அதிக வாய்ப்பு உள்ளது. இதிலிருந்து எவ்வாறு சுதாகரித்துக் கொண்டு சன் டிவி தனது டிஆர்பியை காப்பாற்றிக் கொள்ளும் என்ற யோசனையில் அந்த தொலைக்காட்சி நிறுவனம் உள்ளது. மேலும் விஜய் டிவியின் இந்த புத்தம் புது தொடர்களின் அப்டேட் மிக விரைவில் வெளியாகும்.

Also Read : இந்த வார டாப் லிஸ்டில் இருக்கும் 10 சீரியல்கள்.. ஆண்டவருக்கே ஆட்டம் காட்டிய சன் டிவி

Next Story

- Advertisement -