அமீரை அசிங்கப்படுத்திய பாவனி அக்கா.. விஜய் டிவியின் தந்திர வேலை

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு காதல் டிராக் இருக்கும். அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 5 இல் ஆரம்பத்தில் பாவனி, அபிநய் இருவரும் காதலிப்பதாக சக போட்டியாளர்களுக்கும் சந்தேகம் வந்தது.

அதை வெளிப்படையாகவே ராஜு அபிநயிடம் கேட்டிருந்தார். இந்நிலையில் அபிநய் ஏற்கனவே திருமணமானவர். ராஜு அப்படி கேட்டதால் மோசமான மனநிலையில் இருந்த பாவனிக்கு வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வந்த நடன இயக்குனர் அமீர் ஆறுதலாக இருந்தார். மேலும் அமீர் பாவனியை காதலிப்பதாக வெளிப்படையாகவே கூறினார்.

ஆனால் பிக் பாஸ் வீட்டில் விருந்தினராக வந்த பாவனியின் அக்கா பாவனிடம் சில அறிவுரை கூறினார். அதாவது அமீரிடம் பேசுவதை குறைத்து கொள். நீங்கள் நண்பர்களாக இருந்தாலும் வெளியில் இது தப்பாக பார்க்கப்படுகிறது என அறிவுரை சொல்லிவிட்டு சென்றார்.

ஆனால் பாவனி நாங்கள் நண்பர்களாகத்தான் பழகி வருகிறோம் எனக்கு இது தெரியும் நீ கவலைப்பட வேண்டாம் என கூறியிருந்தார். மேலும் பிக் பாஸ் வீட்டில் அமீரிடம் பாவனி அக்கா சரியாகவும் பேசாமல் இருந்தார். இந்நிலையில் தற்போது பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் இப்படத்தில் ஜோடி சேர்ந்து நடனம் ஆடுவார்கள். இந்நிகழ்ச்சியில் அமீருடன் இணைந்து பாவணி நடனமாடி வருகிறார். ஏற்கனவே அமீர் நடன இயக்குனர் என்பதால் இவர்களது பர்பாமன்ஸ் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் பிபி ஜோடிகளில் இந்த வாரம் பாவனியின் அக்கா என்ட்ரி கொடுத்த ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளார். அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமீரிடம் பேச வேண்டாம் என்ற சொன்ன பாவனியின் அக்கா தற்போது அமீரை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். மேலும் அமீருக்கு பரிசாக ஒரு வாட்சையும் கொடுத்துள்ளார். இதையெல்லாம் டிஆர்பிக்காக விஜய் டிவி செய்யும் சித்து வேலைகள் என வெளியில் பேசப்படுகிறது.

Next Story

- Advertisement -