அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கும் தனுஷின் ஐந்து பார்ட் 2 படங்கள்.. வெற்றிமாறனுக்கு மட்டும் ஒரு வருடம் கால்ஷீட்

நடிகர் தனுஷ் தனது விவாகரத்துக்குப் பின்னர் பல திரைப்படங்களில் நடித்துவருகிறார். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்கள் ஹிட்டான நிலையில் தனுஷின் நடிப்பில் வரிசையாக பார்ட் 2 திரைப்படங்களும் உருவாகவுள்ளது. அதில் தனுஷ் நடிக்க உள்ள 5 பார்ட் 2 படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

வடசென்னை – 2 : 2018 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான வடசென்னை திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் வட சென்னை 2 திரைப்படத்திற்காக பலரும் காத்துக்கொண்டிருக்கின்றனர். இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில், இப்படத்தை முடித்துவிட்டு வட சென்னை 2 இயக்குவார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

Also Read : காஸ்ட்லி ஷூ உடன் வலம் வரும் தனுஷ்.. நீண்ட தாடியுடன் கேப்டன் மில்லர் படத்தின் நியூ லுக்

நானே வருவேன் – 2 : இயக்குனர் மற்றும் தனுஷின் அண்ணன் செல்வராகவன் பல வருடங்கள் கழித்து இயக்குனராக ரீ என்ட்ரி கொடுத்த திரைப்படம் தான் நானே வருவேன். சைக்கோ, த்ரில்லர், ஹாரர் திரைப்படமாக உருவாக்கப்பட்ட இப்படத்தில் தனுஷின் இரட்டை வேட நடிப்பு பலராலும் பேசப்பட்டது. மேலும் செல்வராகவனின் ரசிகர்கள் அவரது இயக்கத்தை வரவேற்றுள்ளனர். இதனிடையே நானே வருவேன் 2 திரைப்படம் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுப்பேட்டை – 2 : இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு தனுஷின் நடிப்பில் உருவாகிய புதுப்பேட்டை திரைப்படம் அப்போது பேசப்பட்டதோ, இல்லையோ இப்போது அதிகமாகவே பேசப்பட்டு வருகிறது. கத்தி, ரத்தம், அரிவாள் , சூடுபிடிக்கும் வசனங்கள் என இப்படத்தில் அனைத்துமே தரமாக இயக்கப்பட்டிருக்கும். புதுப்பேட்டை திரைப்படம் தான் தனது வாழ்க்கையில் முக்கியமான திரைப்படம் என தனுஷ் பல மேடைகளில் தெரிவித்துள்ளார். இதனிடையே புதுப்பேட்டை 2 திரைப்படம் கூடிய விரைவில் உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஹீரோவுக்கு வலைவீசிய தனுஷ்.. சினிமாவிலும் நீயா நானா போட்டு பார்த்துருலாம்!

கர்ணன் – 2 : 2021 ஆம் ஆண்டு தனுஷ், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கொடியன்குளம் கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தின் பாகம் 2 மாரி செல்வராஜ் இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அசுரன் – 2 : இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான அசுரன் திரைப்படத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் நடித்து இருப்பார். ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் உரிமைகளை வேறு சமூக மக்கள் எப்படி பறிக்கிறார்கள் என்ற உண்மை கதையில் அமைந்த வெக்கை நாவலின் அடிப்படையிலேயே இத்திரைப்படம் உருவானது. சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 2 தேசிய விருதுகளும் அசுரன் படத்திற்கு கிடைத்தது. இதனிடையே அசுரன் 2 திரைப்படம் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடசென்னை-2, அசுரன்-2 ஆகிய 2 படங்களுக்கு மட்டும் தனுஷ் கிட்டத்தட்ட ஒரு வருடம் கால்ஷீட் கொடுக்க உள்ளாராம்.

Also Read : உண்மை சம்பவத்தை வைத்து கல்லா கட்டிய 6 இயக்குனர்கள்.. தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் நடக்கும் மேஜிக்

Next Story

- Advertisement -