வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பிழைப்புக்காக எதிர்நீச்சல் சீரியலை அண்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. இறுதிக்கட்டத்தால் எடுத்த முடிவு

Serial Artist entry in Ethirneechal : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களை கடந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. அத்துடன் இதில் நடித்துள்ள நடிகர்கள், நடிகைகள் அவருடைய மற்ற பிராஜெட்டில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இந்த நாடகத்திற்கு ஆணிவேராக இருந்த தனம் மலையாள நாடகத்தில் இணைந்து விட்டார்.

அடுத்தபடியாக ஜீவா, விஜய் டிவியில் கிழக்கு வாசல் என்ற நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட் ஆகிவிட்டார். இவர்களைத் தொடர்ந்து மற்ற நடிகர்களும் அவர்களுக்கான கதாபாத்திரத்தை தேடிக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Also read: ஆணவத்தில் ஆடின குணசேகரனை தும்சம் செய்த ஜீவானந்தம்.. ஜனனி ஷாக், கௌதம் என்டரி வேற லெவல்

அத்துடன் இந்த நாடகத்தில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் மக்களிடத்தில் பெரிய வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் தற்போது எல்லா சீரியல் ஆர்ட்டிஸ்ட் க்கும் இந்த நாடகத்தில் ஏதாவது ஒரு கதாபாத்திரம் கிடைத்து விடாதா என்று பலரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு காரணம் சமீபத்தில் இந்த நாடகத்தில் புதிதாக வந்த கரிகாலன் மற்றும் ஜான்சி ராணி இவர்களுக்கு பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த லிஸ்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஒருவரும் சேர இருக்கிறார். அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லையின் அம்மாவாக நடித்த சாந்தி வில்லியம்ஸ் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வருகிறார்.

Also read: எமனுக்கே எமனாக வந்து நிற்கும் ஜீவானந்தம்.. பொட்டிபாம்பாக அடங்கும் ஜனனி குணசேகரன்

கண்டிப்பாக இவர் வருகிறார் என்றால் இவருக்கேற்ற முக்கிய கதாபாத்திரம் இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. அதே நேரத்தில் ஏற்கனவே குணசேகரனின் அம்மா காசிக்கு போனதாக காட்டிய நிலையில், ஒருவேளை அவருக்கு பதிலாக கூட இவர் நடிக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் எதிர்நீச்சல் நாடகத்தின் இயக்குனர் திருச்செல்வத்திற்கு ஏற்கனவே மாமியாராக மெட்டிஒலி நாடகத்தில் நடித்திருப்பார். அதே மாதிரி கண்டிப்பாக இவர்களுடைய காம்பினேஷன் ரசிக்கும்படியான அமையும். இந்த நாடகத்தின் மூலம் அவருக்கு இதுவரை கிடைக்காத வரவேற்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: ஒத்த கைரேகையால் மொத்தத்தையும் காலி செய்த ஜீவானந்தம்.. ஒன்னும் புரியாமல் நிக்கதியான குணசேகரன்

- Advertisement -

Trending News