விஜய் டிவியில் டாப் ரேட்டிங்கில் உள்ள சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். பல திருப்பங்களுடன் இக்கதை நகர்ந்து வருகிறது. மூர்த்தியின் கடைசி தம்பியான கண்ணன், ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.
இதனால் கண்ணனை வீட்டைவிட்டு வெளியேற்றினார் மூர்த்தி. தனி வீட்டில் வசித்து வந்த கண்ணன், ஐஸ்வர்யா இருவரும் தற்போது மூர்த்தியின் எதிர் வீட்டில் குடி வந்துள்ளார்கள்.
இந்நிலையில் ஐஸ்வர்யா அடிக்கடி மூர்த்தியை வம்பிழுத்து வருகிறார். இன்றைய எபிசோடில் கண்ணனுக்குப் பிடித்த குழம்பை கண்ணனின் அண்ணி தனம் செய்கிறாள். ஐஸ்வர்யாவை அழைத்து குழம்பை தருகிறாள்.
சிறிது நேரம் கழித்து தனத்திற்கு பிரசவ வலி ஏற்படுகிறது. வீட்டில் மீனா, முல்லை யாரும் இல்லாமல் தனத்தின் அம்மா மட்டும் உள்ளார். என்ன செய்வது என்று தெரியாமல் தனத்தின் அம்மா பதட்டத்தோடு வெளியில் வருவது கூச்சல் இடுகிறார்.
எதிர் வீட்டில் இருந்த கண்ணன், ஐஸ்வர்யா இருவரும் வெளியே வந்து பார்க்கிறார்கள். தனத்தின் அம்மா, கண்ணா சீக்கிரம் வா அண்ணிக்கு பிரசவ வலி வந்துவிட்டது என கண்ணனை கூப்பிடுகிறார். கண்ணன் வீட்டுக்குள் வந்து பார்க்கிறார், தனம் பிரசவ வலியில் துடிக்கிறாள்.
அதைப் பார்த்தா கண்ணன் கொஞ்சம் பொறுங்கள் அண்ணி, ஆட்டோ அழைத்து வருகிறேன் என செல்கிறார். ஆட்டோவை அழைத்து வந்துவிட்டு வீட்டுக்குள் சென்று தனத்தை தூக்கி செல்கிறார் கண்ணன். இனி என்ன நடக்கப்போகிறது என பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.