பாண்டியன் ஸ்டோர்ஸில் விழாக்கு பஞ்சமில்லை.. கதைக்கு தான் பஞ்சம்

Pandian Stores: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதாவது பிரிந்த குடும்பம் ஒன்றாக சேர்ந்து புது வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்கிறார்கள். அந்த வீடு தனலட்சுமி இல்லம் என்ற பெயரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தால் வைக்கப்படுகிறது.

மேலும் மூர்த்தி மற்றும் தனம் இருவரும் பூஜை செய்கிறார்கள். அதோடு மற்ற தம்பிகள் மற்றும் அவர்களது மனைவிகளும் இதில் கலந்துகொண்டு மகிழ்ச்சியாக உள்ளனர். எப்போதுமே பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஆரம்பத்தில் இருந்து விழாக்களுக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் அதில் எப்படியும் சண்டையும் இல்லாமல் இருக்காது.

Also Read : புகழை கைது செய்ய வந்த போலீஸ்.. விஜய் டிவி அரங்கத்தில் நடந்த சர்ச்சை சம்பவம்

இப்படி விழாக்களாக கொண்டாடி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதைக்கு தான் பஞ்சமாக இருக்கிறது. ஏதோ ஓட்ட வேண்டும் என்பதற்காக இயக்குனர் கதையே இல்லாமல் உருட்டி வருகிறார். இது ரசிகர்களை எரிச்சல் அடைய செய்வதால் டிஆர்பியும் பின்னடைவை சந்தித்திருக்கிறது.

மேலும் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் புது வீட்டிற்கு வர உள்ளதால் மொத்த குடும்பமும் சேர்ந்து இந்த வீட்டில் மகிழ்ச்சியாக இருக்க உள்ளனர். ஆகையால் இன்னும் இரண்டு வாரங்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் முடிவுக்கு வர இருக்கிறது. ஜவ்வாக இழுப்பதற்கு இப்படி எண்டு கார்டே போட்டு விடலாம்.

Also Read : முறிந்து போன விஜய் டிவியின் காதல் ஜோடி.. ஓவரா போட்ட ஆட்டத்தால் செஞ்சி விட்ட காதலன்

யூடியூப் மோகத்தில் திரியும் ஐஸ்வர்யாவை கண்ணன் திட்டி தனது வழிக்கு கொண்டு வர இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் ஜீவாவின் தயவால் கண்ணனுக்கு மீண்டும் வங்கியில் வேலை கிடைக்க இருக்கிறது. மேலும் மீனாவின் வீட்டில் ஜீவாவுக்கு மரியாதை இல்லாததால் தங்களது சொந்தக் குடும்பத்துடன் இணைய இருக்கிறார்கள்.

கடைசியாக தனத்திற்கு கேன்சர் இருக்கும் விஷயம் மொத்த குடும்பத்திற்கும் தெரியவர அதிலிருந்து சிகிச்சை எடுத்து நல்லபடியாக மீண்டு வந்து விடுவார். மேலும் கதிரின் ஹோட்டல் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை அமோகமாக ஓட இனிதே இந்த தொடரை சுபம் போட்டு முடிக்க இருக்கிறார்கள். ரசிகர்களும் அதற்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also Read : உடல் சுகத்திற்காக கல்யாணம் செய்து கழட்டிவிட்ட விஜய் டிவி நடிகை.. எல்லை மீறிய பயில்வான்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்