சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பாக்கியலட்சுமி போல் உருட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. வீடு வரைக்கும் வந்த சக்காளத்தி

Pandian Stores: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் இப்போது ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் விதமாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக பாக்கியலட்சுமி தொடரில் ரெண்டு பொண்டாட்டி கதையை வைத்தே தற்போது வரை உருட்டி வருகிறார்கள். போதாக்குறைக்கு செழியனுக்கும் இப்போது ஒரு ஆளை கொத்து விட்டுள்ளார்கள்.

இதுவும் இப்போது மாலினி இடமிருந்து எப்படியாவது வெளியே வரவேண்டும் என்று செழியன் நினைக்கிறார். ஆனால் விடாப்பிடியாக இருக்கும் மாலினி நேரடியாக அவரது வீட்டுக்கே வந்து விடுகிறார். இப்போதே பாக்யாவுக்கு கொஞ்சம் சந்தேகம் ஏற்பட தொடங்கி இருக்கிறது. மேலும் ஒருபுறம் அமிர்தாவின் முன்னாள் கணவரும் குடைச்சல் கொடுக்க ஆரம்பிக்க இருக்கிறார்.

இவ்வாறு பாக்கியலட்சுமி தொடரில் தான் உருட்டி வருகிறார்கள் என்றால் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலும் இதே கதை தான். அண்ணன், தம்பி பாசத்தை மட்டுமே வைத்து எடுத்து வந்த இந்த தொடரில் இப்போது மூர்த்தியின் முன்னாள் காதலி ஆன மல்லியின் என்ட்ரி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தையே கதிகலங்க வைத்திருக்கிறது.

அதாவது மல்லியின் வளர்ப்பு மகனான பிரசாந்த் தனது மாமனாரை கத்தியால் குத்தியதால் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதனால் தனிமையில் மல்லியால் அந்த வீட்டில் இருக்க முடியாத காரணத்தினால் இப்போது மூர்த்தி தனது வீட்டுக்கு அழைத்து வந்த விடுகிறார். மேலும் தனத்திற்கு தனது கணவர் மூர்த்தி மீது முழு நம்பிக்கை இருக்கிறது.

ஆனால் நாளுக்கு நாள் அந்த நம்பிக்கை உடையும் படியாக சில விஷயங்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அரங்கேற உள்ளது. அதாவது இரவில் தூக்கம் இல்லாமல் மல்லி வெளியே அமர்ந்திருக்கிறார். அப்போது எதர்ச்சியாக வந்த மூர்த்தி மல்லியை பார்த்து சிறிது நேரம் அமர்ந்து ஆறுதல் கூறி பேசி வருகிறார்.

இதனால் தனத்திற்கு எந்த சந்தேகமும் வரக்கூடாது என்பதற்காக மூர்த்தி சமாதானம் செய்கிறார். ஆனால் தனம் உங்களை விட மல்லி மீது தனக்கு அதிக நம்பிக்கை உள்ளதாக கூறுகிறார். ஆனால் நாளுக்கு நாள் இவர்களது நடவடிக்கையால் பெரிய சிக்கலை தனம் சந்திக்க இருக்கிறார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் பூகம்பம் வெடிக்க உள்ளது.

- Advertisement -

Trending News