புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

கதிர், ராஜி திருமணத்தால் நிலை குலைந்து போன குடும்பம்.. பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமாக நகரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

Pandian Stores 2: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து பெரிய அளவில் கவனம் பெறாமல் போன இந்த சீரியல் ராஜி, கதிர் இருவரின் திருமணத்தால் ஒரு திருப்புமுனையை சந்தித்திருக்கிறது.

அதன்படி ராஜியின் மானத்தை காப்பாற்றுவதற்காக திருமணம் செய்து கொள்ளும் கதிர் வேண்டா வெறுப்பாக ஊருக்கு வந்து இறங்குகிறார். இதனால் இரு குடும்பங்களும் அதிர்ச்சியில் நிலைகுலைந்து போகிறார்கள்.

அதைத்தொடர்ந்து நடக்கும் சண்டையில் பாக்யா தலையிட்டு ரெண்டு பேரும் விரும்பினார்கள். அதனால நான் தான் கல்யாணம் பண்ணி வச்சேன் என கூறுகிறார். உடனே வீட்டிலிருந்து எடுத்துட்டுப் போன பணம், நகை எங்க என ராஜியின் வீட்டில் கேட்கிறார்கள்.

Also read: எல்லா பிரச்சனையும் கதிர் தலையில் போட்டுட்டு எஸ்கேப் ஆகும் கோமதி.. பாக்யா நடத்தப் போகும் நாடகம்

உண்மை வெளியே வந்தால் தாங்க மாட்டார்கள் என மொத்த பழியையும் கதிர் தன் மேல் போட்டுக்கொள்கிறார். இதனால் பிரச்சனை பெரிதாகி பாண்டியன், எனக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுக்கிறியா? பணம் நகை எங்க? என கேட்டு கதிரை ஓங்கி ஒரு அறை விடுகிறார்.

இப்படி அலப்பறையாக இருக்கும் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. இதில் பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என்பது போல் கதிரின் நிலைமை உள்ளது. ஆனால் அனைத்து விஷயமும் தெரிந்த கோமதி சத்தம் இல்லாமல் வாயை மூடி கொண்டிருப்பது தான் எரிச்சல் ஊட்டுகிறது.

அந்த வகையில் ஆரம்பமே ரணகளமாக தொடங்கி இருக்கிறது கதிர், ராஜியின் திருமண வாழ்வு. இனிவரும் நாட்களில் இது மோதலாக இருக்குமா? அல்லது காதலாக இருக்குமா? என்பது தெரிந்துவிடும். எப்படியோ இந்த கல்யாண பிரச்சனையை வைத்து இன்னும் சில மாதங்கள் கதையை ஓட்டி விடுவார்கள்.

Also read: முத்துவின் பேச்சால் சூனியக்காரி ஆக மாறப்போகும் ஸ்ருதி.. இந்த விஷயத்துல எஸ்கேப் ஆன மீனா

- Advertisement -

Trending News