குணசேகரனை ஞாபகப்படுத்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் எம்டன் மகன்.. எதிர்நீச்சலுக்கே டஃப் கொடுப்பாரு போல

Pandian Stores 2 Serial: சின்னத்திரை தொலைக்காட்சியைப் பொறுத்தவரை எத்தனை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் மக்களிடம் அதிகமான கவனத்தை ஈர்க்கும் ஒரு பொழுதுபோக்கான விஷயம் என்றால் அது சீரியல்தான். அதனாலேயே பல சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு தொடர்ந்து சீரியல்களை ஒளிபரப்பாகி வருகிறது. அதில் விஜய் டிவி மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கிறது. ஏனென்றால் இதில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அண்ணன் தம்பிகளின் பாசத்தையும், கூட்டுக் குடும்பத்திற்கான முக்கியத்துவங்களையும் எடுத்துச் சொல்லி கடந்த ஐந்து வருடமாக வெற்றி நடை போட்டு வந்தது. அந்த வகையில் கடந்த வாரம் சனிக்கிழமை இந்த கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து முடித்து வைத்தார்கள். இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகமாக அப்பா மகன்களின் பாசத்தை வைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் மீண்டும் வந்துவிட்டது.

இந்த கதையில் மூர்த்தியை தவிர மற்றவர்கள் அனைவரும் புதிதாக வந்திருக்கிறார்கள். இதில் மூர்த்தியின் மனைவியாக நிரோஷா, மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் மற்றும் நிரோஷாவின் தம்பி என்று ஒரு குடும்பத்தை கொண்டு வருகிறார்கள். அத்துடன் நிரோஷாவின் அண்ணன் குடும்பமாக யோகியை நீண்ட வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் சின்னத்திரைக்கு கூட்டிட்டு வந்திருக்கிறார்கள்.

இவரை பார்த்ததும் சித்தி நாடகத்தில் நடித்த கேரக்டரை ஞாபகப்படுத்துகிறது. அத்துடன் இந்த இரண்டு குடும்பங்களும் சண்டையில் தற்போது பிரிந்து இருப்பது போல் தெரிகிறது. அதாவது யோகியின் தங்கையை மூர்த்தி காதலித்து வீட்டுக்கு தெரியாமல் கல்யாணம் பண்ணுனது தான் ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் காரணமாக இருக்கிறது. அதனால் இந்த இரண்டு குடும்பமும் எலியும் பூனையுமாய் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்.

அடுத்ததாக மூர்த்தி இதுவரை சாந்தமாக இருந்தவர் இதில் ரொம்பவே கரரான கேரக்டரில் மகன்களை கண்டிப்புடன் வளர்க்கும் எம்டன் மகன் ஆகவும் நடந்து கொள்கிறார். அந்த வகையில் முதல் பாகம் ஆனந்தம் படத்தின் கதையாக இருந்தது. தற்போது இரண்டாம் பாகம் எம்டன் மகன் கதையை வைத்து கொண்டு வருகிறார்கள்.

மேலும் இதில் யோகியை பார்க்கும் பொழுது எதிர்நீச்சல் சீரியலில் நடித்த குணசேகரன் கேரக்டரை ஞாபகப்படுத்துகிறது. அந்தளவிற்கு இருவரும் ஒத்துப் போவது போல் தெரிகிறது. போற போக்க பார்த்தா எதிர்நீச்சல் சீரியலுக்கே டஃப் கொடுப்பாரு போல. அதற்குக் காரணம் தற்போது இந்த நாடகத்தில் உள்ள கதை மக்களை அதிகமாக கவர்ந்து இருக்கிறது.