36 வயதினிலே ஜோதிகாவாக மாறிய தனம்.. குடும்பத்தை சரிக்கட்ட எடுத்த தரமான முடிவு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற குடும்ப தொடரில் தற்போது பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறியுள்ளது. அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் ஓடி ஆடி எல்லா வேலையும் பார்க்கும் கதிர் தற்போது தனிக்குடித்தனம் சென்றுவிட்டார். அந்த கவலையில் இருந்த மூர்த்திக்கும் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது.

இதனால் தற்போது ஜீவா மட்டுமே கடையை பார்த்து வருகிறார். தனியாளாக ஒரு கடையை ஜீவாவால் நிர்வாகம் செய்ய முடியாமல் தடுமாறுகிறார். இதனால் கடையில் வியாபாரம் குறையத் தொடங்குகிறது. இதை நினைத்து மூர்த்தி இன்னும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்.

இந்நிலையில் தனம் கடையைப் நான் பார்த்துக்கொள்கிறேன் என கிளம்புகிறார். மேலும் தனம் கடைக்கு வருவதைப் பார்த்த அனைவரும் ஆச்சரியம் அடைகின்றனர். கடையில் எல்லா வேலையையும் இழுத்துப் போட்ட தனம் செய்து வருகிறார். ஒருவழியாக கடையின் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

மேலும் இவ்வாறு தனம் வேலை பார்ப்பதை வீடியோகால் மூலம் மீனாவுக்கு காட்டுகிறார் ஜீவா. இந்நிலையில் வீட்டில் தனத்தின் குழந்தை பாண்டியனை பார்த்துக்கொள்ள மீனா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சிரமப்படுகிறார்கள். அதன்பின்பு குழந்தையையும் கடைக்கு அழைத்து வந்த இரண்டையும் ஒரே நேரத்தில் பார்த்துக்கொள்கிறார் தனம்.

ஒருபுறம் ஹோட்டலில் வேலை செய்யும் கதிர் தவறுதலாக ஒருவரின் சட்டையில் சாம்பாரை ஊற்றி விடுகிறார். இதனால் கடையில் கதர் திட்டுவாங்குகிறார். முதலில் கதிருக்கு கோபம் வந்தாலும் மீனா அப்பா திட்டியதை எண்ணி கோபத்தை அடக்கிக் கொள்கிறார்.

வீட்டில் முடங்கி இருக்கும் பெண்கள் வெளிக்கொண்டுவர முன்னுதாரணமாக 36 வயதினிலே படத்தில் ஜோதிகா நடித்திருப்பார். அதேபோல் தனமும் தற்போது கடையை மீட்டெடுக்க களத்தில் இறங்கியுள்ளார். இதில் வெற்றி காண்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Next Story

- Advertisement -