நல்லா இருந்த குடும்பத்தில் கும்மி அடித்த ராட்சசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு பதிலா பிரச்சனை குடும்பம்னு வச்சி இருக்கலாம்

Pandian Stores Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் கிட்டத்தட்ட 1300 எபிசோடுகளை தாண்டி உள்ளது. அந்த வகையில் இந்த நாடகத்தை பார்ப்பவர்கள் எப்பொழுது இதற்கு எண்டு கார்டு வரும் என வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் கதையே இல்லாமல் அரைத்த மாவையே வைத்து உருட்டிக் கொண்டு வருவதுதான்.

முக்கியமாக இதில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா கேரக்டர் சமீப காலமாக பலருக்கு எரிச்சலை அடைய வைத்திருக்கிறது. அதிலும் ஐஸ்வர்யா தெரிஞ்சே பல பிரச்சினைகளுக்கு காரணமாகி இருக்கிறார். பொதுவாக நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று சொல்வார்கள் அது போல ஐஸ்வர்யாவை என்றைக்கும் திருத்தவே முடியாது.

Also read: கள்ள காதலனை பார்த்துட்டு வரியா ஈஸ்வரி.? செல்லா காசாக குணசேகரனை கிழித்து தொங்க விட்ட சம்பவம்

அதாவது தனத்திற்கு மார்பக புற்றுநோய் பிரச்சனை இருப்பதை தெரிந்த மீனா மற்றும் முல்லை குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் சொல்லாமல் அவரை சரி செய்து கொண்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் வீடியோ மூலம் அப்பட்டமாக ஐஸ்வர்யா தன்னுடைய குடும்பத்திலேயே இந்த நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தைப்பட்டு வருகிறார் என்பதை உளறுகிறார்.

இந்த வீடியோவை பார்த்த குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் பதற்றத்துடன் ஒன்றுகூடி யாருக்கு என்னாச்சு என்று கேட்கிறார்கள். அப்பொழுது ஐஸ்வர்யாவிடம், அத்தாட்சி உன்னுடைய சேட்டைக்கு ஒரு அளவே இல்லையா ஏன் தேவையில்லாமல் பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்க. என்னைக்குமே திருந்த மாட்டியா என்று ஐஸ்வர்யாவை திட்டுகிறார்.

Also read: எதிர்நீச்சல் சீரியலை பின்னுக்குத் தள்ளிய விஜய் டிவி சீரியல்.. ரொமான்ஸில் பின்னி பெடல் எடுக்கும் டாம் அண்ட் ஜெர்ரி

உடனே இந்த ஐஸ்வர்யா நான் சொன்னது அத்தனையும் உண்மை இந்த குடும்பத்தில் உள்ளவருக்கு நோய் இருக்கிறது என்று சொல்கிறார். அப்பொழுது ஒவ்வொருவரும் யார் யார் என்று கேட்க அதற்கு தன அக்காவுக்கு தான் என்ற உண்மையை போட்டு உடைத்து விடுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியில் ஒட்டு மொத்த குடும்பமும் உறைந்து போய் நிற்கிறார்கள்.

இந்த ஐஸ்வர்யாவுக்கு நல்லா இருந்த குடும்பத்தில் கும்மி அடிக்கதே வேலையா போச்சு. இதனை அடுத்து மூர்த்தி, தனத்திடம் இப்படி ஒரு பிரச்சனை உனக்கு இருப்பதே ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கேட்டு கண்ணீர் கம்பளமாய் அனைவரும் பாசப் போராட்டத்தை நடத்தப் போகிறார்கள். இதன்பின் தனத்திற்கு என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் ஏற்பட்ட சிக்கல்.. விஜய் டிவியின் பாலிடிக்ஸ், ஒத்து ஊதும் இரண்டு பிரபலங்கள்

- Advertisement -